மூத்தோர் சொல்
காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்.
இப்போது எனது தாயார் புதிதாக தனது பாணியில் 'விசாரணையை' ஆரம்பித்தார். எங்கே, எவ்வாறு நான் தவற விடப்பட்டேன்? என்பதுதான் விசாரணையின் கருப்பொருள். என் அண்ணன் இந்தத் தடவை பதில் சொல்லுவதற்குப் பின்னடித்தான். தன்மீது முழுத் தவறு என்று தெரிந்ததாலோ என்னவோ, தத்தித் தடுமாறி, மென்று விழுங்கிக் கொண்டிருந்தான். விசாரணை என் பக்கம் திரும்பியது. நான் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், மாங்காய் பொறுக்குவதற்காகக் கணேப்பிள்ளையர் வளவிற்குச் சென்றது தொடக்கம், நான் காணாமல் போக நேர்ந்தது வரை கடகடவென்று கூறி முடித்தேன். இடையிடையே நான் 'பயந்துபோன' தருணங்களைப் பற்றி விபரிக்கும்போது அழுகை வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டேன். அம்மாவின் கோபமான 'பார்வை' அண்ணாவின் பக்கம் திரும்பியது.
இந்த பயம் எம்மை ஆட்கொண்ட காரணத்தால் அன்று நானும் அண்ணாவும் வெளியே சிறுவர்களோடு விளையாடச் செல்லவில்லை. எங்கள் வீட்டிற்குப் பின் பக்கமே எங்கள் விளையாட்டிடம் ஆனது. வீட்டின் கோடிப்புறத்தில் மணலாக இருக்கும் இடங்களில் மிகவும் அழகாக ஒரு சிறிய குழியை ஏற்படுத்துகின்ற ஒருவகைப் பூச்சியினம் வாழ்ந்துவரும். அந்த மணலில் வாழ்ந்துவரும் மிகச் சிறிய பூச்சிகளைப் பிடித்து 'சிரட்டைகளால்' மூடி வைப்போம்.ஒரு சில நிமிடங்களால் சிரட்டையைத் திறந்துபார்த்தால் அந்தப் பூச்சி மாயமாய் மறைந்திருக்கும். அந்தப் பூச்சி மணலைக் கிளறியபடி ஏதாவது ஒரு வழியால் தப்பித்துப் போய்விடுகின்ற விடயம் எங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாகும்.
வீட்டிற்கு வந்த அப்பா எங்களோடு சேர்ந்து 'இரவுணவை' உண்ணும்போது, என் மனதில் 'முதுகுத் தோல்' உரியும் நிகழ்வு படமாக ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு இருந்த பயத்தில் அன்று அம்மா தந்த 'சோறும் நண்டுக் குழம்பும்' சுவையாக இருந்ததா? சோறு இரைப்பையில் ஒழுங்காக சென்று இறங்கியதா? என்பவையெல்லாம் இன்றுவரை ஞாபகமில்லை. ஆனால் சாப்பிட்டு முடித்ததும் அம்மா 'நேர்மையின் மறு அவதாரமாக' நண்பகலில் நடந்த சம்பவத்தை அப்பாவிடம் கொஞ்சம் 'மென்மையான' முறையில் எடுத்துக் கூறினார். எங்கள் அப்பாவிடம் எப்போதுமே ஒரு வழக்கம் இருந்தது. அதாவது 'பர்மிய, பாகிஸ்தானிய' இராணுவ ஆட்சியாளர்கள் போல, திடீர் புடீர் என முடிவுகளை எடுப்பது. அது அற்ப விடயமாக இருந்தாலென்ன, மிகப்பெரிய விடயமாக இருந்தாலென்ன அவர் அப்படித்தான் முடிவுகளை எடுப்பார். அன்று அவர் எங்களை அடிக்கவில்லை. ஆனால் அவர் எடுத்த முடிவு என்னை மிகப்பெரும் திகைப்பிற்கு உள்ளாக்கியது.

![]() |
| விஞ்ஞானி திரு.சந்திரபோஸ் |
![]() |
| மண்டைதீவு முகப்புவயல் முருகன் ஆலயம் |
அவர் தனது வீட்டை நோக்கிச் சென்றவுடன் அந்த மனிதரைப் பற்றிய 'பாராட்டுப் பத்திரம்' ஒன்று என் தாயாரால் வாசிக்கப் பட்டது. எனது தாயார் அந்த மனிதரைப் பற்றிக் கூறிய புகழுரைகளிளிருந்து அம்மனிதரின் பெயர் 'கார்த்திகேசு' எனவும், எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஐந்தாறு வீடுகள் தள்ளி வசிப்பவர் என்பதும், முருகனின் நூற்றுக்கணக்கான பெயர்களில் 'கார்த்திகேயன்' என்பதும் ஒன்று எனவும், எங்கோ காணாமல் போய், கிணற்றிலோ, குளத்திலோ விழுந்து சாக இருந்த பிள்ளையாகிய என்னை என் அம்மா தினமும் வணங்கும் முருகன்தான் 'கார்த்திகேசு' எனும் மனித வடிவில் வந்து காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறார். எனவும் என் தாயாரால் 'சிலாகிக்கப் பட்டது'. என் தாயார் கூறியதில் 'உண்மை' இல்லாமலில்லை. ஏனெனில் 'மண்டைதீவு' உட்பட யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் 'கிணறுகள்' நில மட்டத்தோடு இருக்கும். இவற்றில் சிறு பிள்ளைகள் தவறி வீழ்ந்து இறப்பது உண்டு. பெரும்பாலும் மழைக் காலங்களில் இது அதிகமாக இடம்பெறுவதுண்டு. அம்மா கூறிய 'முருகன்' கதை எத்தனை வீதம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் 'தெய்வம் மனித வடிவில் வந்து' உதவுவதாகத்தானே 'வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.
இதேபோல் என் தாயார் கூறிய ஒரு கருத்து என்னால் என்றுமே மறக்க முடியாதது. அதாவது ஒரே கிராமத்தில் இரண்டு 'முருகன்' கோயில்கள் இருப்பது மிக மிக அபூர்வம் என்றும், 'மண்டைதீவு', 'அல்லைப்பிட்டி' ஆகிய இரண்டு கிராமங்களில் மட்டுமே இது 'திருவுள சித்தப்படி' நிகழ்ந்துள்ளது என்றும், இது தற்செயலாக நடைபெற்ற ஒரு விடயம் அல்ல என்றும், இதுவும் 'இறைவனின் சித்தம்' எனவும் கூறியிருந்தார். இவ்விடயத்தை நான் ஆராய்ந்து, விசாரித்துப் பார்த்ததில்லை. காரணம் என் தாயாரின் 'நம்பிக்கையை' சிதறடிக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவே.
தோட்டங்கள் ஊடாக நடந்துகொண்டிருந்தாலும், குடிமனைகள் இருக்கும் பகுதியை எவ்வாறு சென்றடைவது என்பது எனக்குப் புலப்படவில்லை. காலில் மிகவும் சிறிய நெருஞ்சி முட்கள் குத்தத் தொடங்கின. ஒவ்வொரு பத்து மீட்டர் தூரமும் நடந்தபின்னர், என் காலில் தைத்த சிறிய முள்ளை காலிலிருந்து அப்புறப் படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டதால் என் நடையில் வேகம் தடைப்பட்டது. செருப்போடு நடந்து செல்வோர் 'பாக்கியவான்கள்' என்று நினைத்துக் கொண்டேன். எனக்குச் செருப்புக் கிடைக்காமல் போனதற்கும் என் அண்ணனே காரணம். ஏனெனில் தனக்குக் கிடைத்த செருப்பை பள்ளிக்கூடம் தொடங்கி இரண்டு நாடகளுக்குள் என் அண்ணன் தொலைத்ததால், நானும் செருப்பைத் தொலைக்கக் கூடும் என்று என் தந்தையார் கருதியதால், எனக்கு 'செருப்பு' வாங்கித் தரவில்லைப் போலும். பள்ளிக்கூடத்தில் டீச்சர் சொல்லித் தந்த பாடலாகிய:
இத்தனை குழப்பங்களோடும், பயத்தோடும் நடந்துகொண்டிருந்த எனக்கு அதிக தூரம் நடந்தும்கூட எங்கள் வீடு தென்படாதது ஏமாற்றத்தையும், அழுகையையும் ஏற்படுத்தியது. இப்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தேன். நான் அழுதது அருகில் ஒரு தோட்டத்தில் தண்ணீர் ஊற்றிகொண்டிருந்த ஒரு கமக்காரரின்(*விவசாயியின்) காதில் விழுந்திருக்க வேண்டும், என்னை நோக்கி ஆழமாகப் பார்வையைச் செலுத்திய அந்த மனிதர் என்னை நோக்கி சத்தமாக "டேய் பொடியா இஞ்ச வா"(*டேய் பையா இங்கே வா) என அழைத்தார்.