லாவோட்சு
நீரைவிடப் பலவீனமானது வேறொன்றுமில்லை. ஆனால் வன்மையை வெற்றி கொள்வதில் அதைவிட உயர்ந்தது வேறொன்றும் இல்லை என்பது நமக்கு வியப்பாக இருக்கின்ற, ஆனால் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய பேருண்மை. கரைகளையும், அணைகளையும் உடைத்துச் சிதறிச், சீறிப் பாய்ந்து வரும் வெறி பிடித்த வெள்ளமும் வெறும் தண்ணீர்தானே? கல் நெஞ்சையும் கரைக்கும் 'கண்ணீர்' என்பதும் ஒரு வகைத் தண்ணீர்தானே? கடைசிக் காலத்தில் அனைத்தையும் அடையாளம் இல்லாமல் அழித்துத் தன் வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளக் காத்திருக்கும் பிரளயம் என்கிற ஆழிப் பேரலையும்(சுனாமி) தண்ணீரின் ஒரு வடிவம்தானே? இருப்பினும் மென்மை என்பது வாழ்வின் தோழன்; வன்மை என்பது சாவின் தோழன் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக