செவ்வாய், மே 28, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள் 


7. புல்லினும் அற்பமானது எது?
 புல்லினும் அற்பமானது கவலை.

8. தேசாந்திரம்(தூர தேசம்) போகிறவனுக்கு யார் தோழன்?
தேசாந்திரம் போகிறவனுக்குத் தோழன் அவன் கற்று வைத்திருக்கிற வித்தை(தொழில்) ஆகும்.

9. வீட்டில் இருக்கிறவனுக்கு யார் தோழன்(நட்பு)?
 வீட்டில் இருக்கிறவனுக்கு அவனது மனைவியே தோழன்(நட்பு) ஆவாள். 

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

MUTHU AIYER சொன்னது…

"வீட்டிலிருக்கிறவனுக்கு அவனது மனைவியே தோழன் (நண்பன்) ஆவாள்" என்று கீதையின் விடை தந்த தாங்கள், பஞ்சதந்திரம் கூறும், "கொலையும் செய்வாள் பத்தினி" என்ற வாசகத்தை ஏற்க இயலுமா? இதுமட்டுமல்ல, நம் பண்டை நூல்களில் பல முன்னுக்குப் பின் முரணாக எழுதி இருப்பதை இங்கு நான் நினைவுகூற விரும்புகிறேன். ஔவைப்பாட்டி, "அறஞ்செய விரும்பு" என்று முன்னால் எழுதிவிட்டுப் பின்னர், "ஏற்பது இகழ்ச்சி" என்றும் எழுதியுள்ளார். இதற்குத் தங்கள் விளக்கத்தைத் தயைகூர்ந்து அருளவும்....முத்து ஐயர் muthuaiyer@yahoo.com

anthimaalai@gmail.com சொன்னது…

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது அன்பரே. "கொலையும் செய்வாள் பத்தினி" என்றுதானே பஞ்ச தந்திரம் சொல்கிறது. "கொலை செய்வாள் பத்தினி ஆதலால் எப்போதும் பயந்துகொண்டு நடுங்கிக் கொண்டு வாழ்க்கை நடத்து" என்று கூறவில்லையே. கொலை செய்யும் நிலை வந்தால் அவள் கொலை செய்யவும் தயங்க மாட்டாள் என்றுதானே கூறுகிறது. அதுவும் "கணவனைக் கொலை செய்வாள்" என்று கூறவில்லையே. அவள் அடக்கம், ஒடுக்கம் மற்றும் நால்வகைக் குணங்கள் நிறைந்த பெண்தானே என்று ஏளனமாக எண்ணாதே அவள் ஒரு கட்டத்தில் கொலையும் செய்யக் கூடிய மன வலிமையைக் கொண்டவள் என்பதை நமது ஆணாதிக்க சிந்தனை கொண்ட மனிதர்களுக்கு எடுத்தியம்ப முற்பட்டிருக்கலாம் என்பது அடியேனின் கருத்து. அதேபோல் ஒவைப் பாட்டியும் 'அறஞ்செய்ய விரும்பு' எனப் பணக் காரனுக்கும், "காலம் முழுவதும் அடுத்தவன் இடுகின்ற பொருளில் வாழ்நாளை ஓட்டாதே" என்று ஏழைக்கும் உணர்த்துவதற்கு 'ஏற்பது இகழ்ச்சி' என்றும் கூறியிருக்கிறாள். 'ஆத்தி சூடி', 'கொன்றை வேந்தன்' போன்ற அவளது முதுமொழிகளில் சமூகத்தின் பல மட்டத்தில் உள்ளவர்களுக்கும் கருத்துக்கள் உள்ளது என்றே நான் நம்புகிறேன்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"
அன்புடன்
ஆசிரியர்
அந்திமாலை
www.anthimaalai.dk

Muthu Iyer சொன்னது…

நன்றி ஐயா. நல்ல விளக்கம். சத்தியவான் உயிரையும் காலனிடமிருந்துப் போராடிப் பெற்றவளும் சாவித்திரி என்ற பெண்தான். இந்த நாட்களில் வரும் செய்தித்தாள்களில் கணவனைக் கொன்ற மனைவியின் செய்திகளையும் நாம் காணத்தவறுவதில்லை. தன்னிடமுள்ள பணத்தை வங்கிகளில் வைப்புத் தொகையாக்கி, தனக்கு வேண்டிய பொருட்களைத் தவணை முறையில் வாங்கி, வங்கியிலிருந்து வரும் வட்டியிலேயே அந்தத் தவணைகளைச் செலுத்தும் வழக்கத்தைப் பலர்கொண்ட இச்சமுதாயத்தில் ஏற்பது இகழ்ச்சியென்பதற்கே இடமில்லை என்பதையும் நாம் நன்கு உணர்வோம். இவையாவும் நடந்தாலும் அந்தப் பொன்மொழிகள், (ஆம்! அவைகள் யாவும் பொன் மொழிகள்தான்) முன்னுக்குப் பின் முரணாக விளங்குகிறதோ என்ற பலர் ஐயங்களைப் போக்கவே, கற்றறிந்த, தங்களைப் போன்ற, சான்றோர்கள் மூலம் அறியவே அந்த மடலை வரைந்தேன். அதற்கு மதிப்பு கொடுத்து உடன் மறுமடல் எமக்கு அனுப்பியதற்கு மிக்க நன்றி......வணக்கம்.

ever yours,
muthu

கருத்துரையிடுக