திங்கள், ஜூலை 04, 2011

தாய்லாந்துப் பயணம் - 8

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
பாசம் வைப்பது மோசம் என்பது வாழ்வு அனுபவம். 10 வருடங்களுக்கு முன்பு 1998ல் ஒரு நாள், ……..
அப்போதெல்லாம் இலங்கைச் செய்திகள் அறிய டென்மார்க்கில் தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாத காலம். கொழும்பில் சிலிங்கோ கட்டிடத்தில்  The Finance company க்கு குண்டு போட்டு விட்டனர் என்று அறிந்து மாலை டெனிஷ் தொலைக் காட்சியைப் பார்த்த போது செய்தியில் சிலிங்கோ கட்டிடம் எரிவது தெரிந்தது.
…’ஐய்யோ! தம்பி வேலை செய்யும் கம்பெனி எரியுது! ” என்று 
பதறிய நான் கொழும்புக்குத் தொலை பேசி எடுத்தேன். அன்று வேலையால் தம்பி வீடு வரவில்லை யென்றும், இரண்டு வைத்தியசாலைப் பெயர்ப் பட்டியலிலும் தம்பியின் பெயர் இல்லையென்றும், நாம் அவரைத் தேடுகிறோம் என்றும், தங்கை கூறினாள்.
கொத்தலாவலையின் கம்பெனி அது. என் தம்பி அங்கு நிறைவேற்று அதிகாரியாக (Executive staff ஆக) வேலை செய்கிறார் (இந்தக் கட்டுரை எழுதும் போது). எனக்கு ஒரேயொரு, உயிரான தம்பி. குண்டு வெடித்ததும் தம்பி தனது அறிமுக அட்டை, திறப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கலவரம் வெடிக்க முதல் தனது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து எடுத்திட வேண்டும் என்று இறங்கி ஓடியுள்ளார். மக்களோடு இடிபட்டு அவரது ஆடையில் இரத்தக் கறை பட்டுள்ளது. பொலிசார் சந்தேகப்பட்டுப் பிடித்த 16 பேரில் இவரும் ஒருவராக அகப்பட்டு விட்டார். பிறகு திருவாளர் கொத்தலாவலை வந்து இவர் தனது ஊழியர் என்று கூறி நீதிமன்றத்தில் தம்பியை விடுவித்தனர். இது அங்கு நடந்தது.
இங்கு இரவு முழுதும் நான் அழுதபடி.
விடிகாலையில் கொழும்புத் தொலைபேசியில் தம்பி பொலிஸ் நிலையத்தில் இருக்கிறார் என்ற செய்தியைத் தந்தனர். மூன்றாவது நாள் எனது ஒரு கால் நடக்க முடியாது நோவெடுத்தது.
வைத்தியர் முதலில் டிஸ்கோபொலப்ஸ் என்றார். (முதுகு தண்டில் சவ்வு விலகுவது)
ஓரிரு நாள் படுக்கை ஓய்வின் பின் என்னால் நடக்க முடிந்தது. அது டிஸ்கோபொலாப்ஸ் (இந்த உச்சரிப்பு டெனிஸ் மொழிக்குரியது) இல்லையென்றும் ஆனது. ஆயினும் வைத்தியர் மசாஜ்க்கு எழுதினார்.
அதிலிருந்து தான் நான் 10 வருடமாகத் தேவை ஏற்படும் போது மசாஜ்க்குப்  போவதுண்டு. எப்போதும் பாரம் தூக்க வேண்டாம் என்றனர்.
தாய் மசாஜ் உலகப் பிரசித்தம். இரண்டு நாளுக்கொரு தடவை, தாய்மசாஜ்,  herbal மசாஜ் என்று மாறி மாறி அங்கு நான் போய் செய்தேன்.  கேபல் மசாஜ் என்பது, மசாஜின் பின் சூட்டுடன் மூலிகைப் பொட்டலத்தால் ஒத்தடம் கொடுப்பது.
கராட்டி ஆடை போல தொளதொள முக்கால் கால்சட்டை, முக்கால் கை நீட்ட மேலாடை தந்து ஆடை மாற்றக் கூறி ஆடையோடு தான் மசாஜ் செய்தனர் கேபலுக்கு நமது ஆடையில் சாயம் படும் என்று அவர்களது ஆடையோடு தான் படுக்க வைத்து செய்தனர்.
ஒரு முதிரிளம் பெண், சம்சாய் எனது மசாஜ் பெண் திருமணமாகாதவள்,  அவள் கூறினாள்,  ” இங்கு ஆண்கள் நன்கு குடித்திட்டு குடும்பத்தைக் கவனிக்க மாட்டார்கள். இந்த நிலையை என்னால் சமாளிக்க முடியுமோ தெரியவில்லை. அதனால் தான் திருமணம் புரியவில்லை. இந்த வாழ்க்கை நல்லாயிருக்கு”  என்றாள்.
அந்த நீண்ட அறையில் 6-7 கட்டில்கள் விரித்தபடி, அழகிய தாய் படுதாக்கள் சுவரில் அழகுக்கு தொங்கியபடி. இனிய இதமான மெல்லிய இசை பின்னணியில் இசைந்தபடி, அழகிய பூ சாடிகள், மனம் மயங்கும் வாசனை அறையினுள்ளே.
அந்தச் சூழலே நோவை மாற்றி விடும். ஒரு மணி நேரம் அந்த அறையுள் இருந்து வெளியே வரும் போது இந்த உலகமே என் கையுள் என்பது போன்ற மனதிடம் உடற்பலம் வந்தது போல இருந்தது.
மனமுணர்ந்து சேவை செய்தாள் அந்தப் பெண். ஒவ்வொரு தடவையும் அவளை இறுகக் கட்டியணைத்தே விடை பெற்றேன். அவளை மறக்க முடியாது.
இன்றும் அவளது மசாஜ்க்கு என் மனம் ஏங்கித் தவிக்கிறது.
- பயணம் தொடரும்—

9 கருத்துகள்:

Arul, DK சொன்னது…

Good

Raja and Mala சொன்னது…

It's sad to hear about your brother.

Sakthy, DK சொன்னது…

Interesting and sad

பெயரில்லா சொன்னது…

ஓருவரும் சோகமாக உணர வேண்டாம். வாழ்க்கை வெல்வதற்கு! அழுது சோகப்பட அல்ல. இது அந்த நேரம். இன்று முன்னேறி வந்து அனைவரும் மகிழ்வாக உள்ளோம். ஆகையால் சோகப் பாடல் வேண்டாம். அதை வெறுக்கிறேன் நான்.

suthan சொன்னது…

very good vetha i am happy to reading from yours article

seetha சொன்னது…

உண்மையாகவே கண்ணிற் நீரோடும் கதை
வாழ்த்துக்கள் நாம் எத்தனை முறை விழுந்தோம் என்பது தேவை இல்லை அத்தனை தடவையும் எழுந்தோம் அதுதான் வாழ்வில் தேவை

பெயரில்லா சொன்னது…

Thats right Seetha! cheer up!...I like this! no sad! no tear!
Anthimaalai Thank you! கருத்தாளர்களுக்கும், கருத்திட வர இருப்பவர்களுக்கும் வணக்கம்! வாழ்த்துடன் நன்றியும்.

vinothiny pathmanathan dk சொன்னது…

ம்ம் உங்க தாய் மசாஜ் பற்றிய பற்றிய குறிப்புக்களை வாசிக்கும் போது அதனை அனுபவித்து நானும் எனது உடல் உபாதைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் .

seetha சொன்னது…

thanks kovaikavi

கருத்துரையிடுக