ஞாயிறு, ஜூலை 17, 2011

ஒட்டகத்தைக் கட்டிக்கோ..,பகுதி - 1.00

டேனிஷ் மொழியில்: Johan Joelsson மற்றும் Jonathan Jacobson

தமிழில்: இ.சொ.லிங்கதாசன்

வெகு விரைவில் ஐரோப்பியக் கடைகளில் ஒட்டகப் பால்.!
வெகு விரைவில் டேனிஷ் கடைகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் ஒட்டகப் பாலும் இடம் பிடிக்கும். ஐக்கிய அரபுக் குடியரசுகள் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஒட்டகப் பாலை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுவாக மனிதர்களால் விரும்பிப் பருகப்படும் 'பசுப் பாலைத்' தரும் மாடுகள் 'வெப்ப வலயங்களில்' பாதிப்புக்களை எதிர்கொள்கின்றன. ஆனால் ஒட்டகங்கள் வெப்ப வலயத்திலும், குளிர்ப் பிரதேசங்களிலும் எந்தவிதமான பாதிப்பையும் எதிர்கொள்ளாமல் 'பால் தரும்' வல்லமை உள்ளவை எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பசுப் பாலைப் பருகும்போது 'ஒவ்வாமை' (அலர்ஜி / Allergy) நோயை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு ஒட்டகப் பால் ஒரு சிறந்த 'மாற்றீடு' எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்குக் காரணம் பசுப் பாலில் காணப்படும் 'ஒவ்வாமையை' ஏற்படுத்தும் குறிப்பிட்ட வகையான 'புரதங்கள்' ஒட்டகப் பாலில் குறைவாகக் காணப் படுகின்றன. அத்துடன் பசுப் பாலை விடவும் ஒட்டகப் பாலில் குறைந்த அளவு கொழுப்புச் சத்தே காணப் படுகிறது. அது மாத்திரமன்றி, ஒட்டகப் பாலில் மனித உடலுக்குத் தேவையான உயிர்சத்து C, உயிர்சத்து B, இரும்புச் சத்து, கால்சியம் போன்றவை அதிக அளவில் காணப் படுகின்றன.

நன்றி: Samvirke juli 2011



(தொடரும்)

3 கருத்துகள்:

mauran Denmark சொன்னது…

athesajamai ullathu.

vetha... சொன்னது…

kadavulea!.......

vinothiny pathmanathan dk சொன்னது…

ஞாபக மறதி இருப்பவர்களைப் பார்த்து ஒட்டகப் பால் குடி என்று சொல்வார்கள், இந்த தகவலை பார்க்கும் போது எனக்கு அந்த விடயம் தான் நினைவுக்கு வருகிறது. நன்றி தாசன் தகவலுக்கு

கருத்துரையிடுக