செவ்வாய், ஜூன் 25, 2013

இன்றைய சிந்தனைக்கு

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

19. சிறந்த சாரதி யார்? தலைசிறந்த வீரன் யார்?
 கடிவாளத்தைப் பிடிப்பது மட்டும் சாரதிக்குப் போதாது. குதிரையை அடக்கித் தனது கட்டுப் பாட்டில் வைத்திருப்பவன்தான் சிறந்த சாரதி. குதிரையை அடக்குவது போல் கோபத்தை எவன் அடக்குகிறானோ அவன்தான் தலைசிறந்த வீரன். பாம்பு தனது சட்டையை உரிப்பதுபோல் வந்த கோபத்தை எவன் நீக்கி விடுகிறானோ அவன்தான் ஆண்மை படைத்தவன்.

20. எவன் காரியசித்தி(வெற்றி) அடைவான்?
 பிறர் எவ்வளவு வருத்தினாலும் எவன் வருந்தாமல் இருக்கிறானோ அவனே காரிய சித்தி(வெற்றி) அடைவான். 

21. எவன் மன வைராக்கியம் உள்ள பண்டிதன் ஆவான்?
 மாதம் தவறாமல் யாகம் செய்து கொண்டு நூறு வருட காலம் வாழ்ந்தவனைக் காட்டிலும், கோபிக்காதவன் மேலான பண்டிதன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக