லாவோட்சு
'உயிருடையவை' மென்மையாக இருப்பதையும், 'இறந்தவை' வன்மையாக இருப்பதையும் உற்று நோக்குங்கள். அந்த வகையிலேயே நான் கூறுவதைக் கவனியுங்கள். "வலிமையான படை போரில் தோற்கும்". கடினமான மரம் வெட்டப் படும்.பெரியதும் வலியதும் கீழே இருப்பதற்கு உரியன. மென்மையானதும், பலவீனமானதும் மேலே இருப்பதற்கு உரியன. "மிகை"(அதிகம் வைத்திருத்தல்) என்பது இயல்பான, எளிமையான வாழ்வுக்கு எதிரானது. அமைதியான வாழ்க்கைக்கு ஆபத்தானது. எப்போது நிறுத்த வேண்டும் என்று தெரிந்தவனுக்கு ஆபத்து வருவதில்லை; அவன் அதிக காலம் உயிர் வாழ்வான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக