ஓவியம்: இளையராஜா (elayarajaartgallery.com) |
வாழ்க்கையில் எந்தத்தடங்கல் வந்தாலும் இவர்கள் தாங்கள் சரியில்லை என்ற கண்ணோட்டத்துடன் பார்த்து பார்த்து தங்களை வருத்திக்கொள்வார்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலைகளில் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறீர்கள்? அந்தச்சூழ்நிலைகளில் உங்களில் உணர்வு என்னவாக உள்ளது? என்று கூர்ந்து கவனியுங்கள்.
உங்கள் உணர்வு கோபம் - பயம் - துக்கம் - கவலை - போன்றதாக இருக்கலாம். மன உளைச்லுக்கான சூழ்நிலை மற்றும் உணர்வுகளைக் கண்டவுடன் அதற்கான காரணத்தை நோக்குங்கள். அத்தகைய சிந்தனை முறை இருப்பின் கீழ்வரும் கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.
• இப்படி நான் சிந்திப்பதன் விளைவு என்ன?
• நான் மிகவும் மதிப்பளிப்பவர்கள். நான் இவ்வாறு சிந்திப்பதை விரும்புவார்களா?
• எனக்கு பிடித்தமானவர்கள் இத்தகைய சிந்தனை முறையை பயன்படுத்தினால் நான் அவர்களை இவ்வாறே சிந்திக்க ஊக்குவிப்பேனா?
இது போன்ற கேள்விகள், முறையற்ற சிந்தனையின் ஒட்டத்தை முற்றிலும் முறிக்கும். அகற்றும். அந்த நேரத்தில் நன்கு மூச்சை இழுத்து வெளியே விடுங்கள். மூச்சை நன்கு இழுத்து விடும் போது இது ஒரு புதிய தருணம் என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.
இந்த பயிற்சியால் கடந்த கால தவிப்பில் இருந்து மனம் விடுபட்டு நிகழ்காலத்துக்கு வரும். அப்பொழுது ஒளியின் பயனால் விலகிய இருள் போல, முறையற்ற சிந்தனை நீங்கி புதிய சிந்தனை வளர வாய்ப்பு உண்டாகும். மனமும் தெளிவு பெறும்.
தெளிவு பெற்ற மனம்....நல்வழி காட்டும்...
நன்றி: மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக