வெள்ளி, மார்ச் 15, 2013

இறப்பு எப்படி இருக்கும்?

ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம்.
எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.!
ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள்! அந்த இடம், காசி நகரம். அங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதி ல்லை. அங்கே உள்ள கோவில்களில் இசை யும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.
இறப்பை கொண்டாடும் அதே காசி நகரம், ‘இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை’ என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை.
காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத் தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 1800 கோவல்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரமாக நன்கு மகுடன் சூட்டிக் கொண்டி ருக்கிறது. எந்நேரமும் பக்தர்கள் கோவில் களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எந்நேரமும் வெளிச்சம்! (காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம்)
இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரிவிக்கிடக்கிறது. இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெரிவிற்கும் ஒரு கதை! அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம்.
காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். அஸி கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்!
அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.
ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி!
அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.
இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று ‘கங்கா லாப் பவன்’! இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது.

நன்றி: விக்கிமீடியா.com 
பல ஆண்டுகளுக்கு முன்பு கோடீஸ்வரர் ஒருவரின் பாட்டி, தனது இறுதி மூச்சை காசியில் விட வேண்டும் என்று விரும்பியி ருக்கிறார். அவரைக் கொண்டு சென்ற உறவினர்கள், தங்க இடம் கிடைக்காமல் தவித்து எப்படியோ ஒரு இடத்தை தேடிப்பிடித்திருக்கிறார்கள். பாட்டி கால மான பின்பு, ‘மோட்சம் தேடி வரும் ஏழைகள் தங்க எந்த இடமும் நிரந்தரமாக இல்லையே’ என்று அவர்கள் கவலைப்பட் டிருக்கிறார்கள்.
கவலைப்பட்டவர்கள் செல்வச் சீமான்களாக இருந்ததால், அங்கிருந்த பொலிஸ் நிலையத்தை குத்த கைக்கு எடுத்து... மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக