இன்றைய குறள்
அதிகாரம் 67 வினைத் திட்பம்
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. (667)
பொருள்: உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அதனால் ஒருவரது உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது. ஒருவர் உயரம் குறைந்தவராக, மெலிந்த தோற்றம் கொண்டவராக இருப்பினும் அவர் பல திறமைகளைக் கொண்டவராக இருக்கக் கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக