ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
எங்கள் கிராமமாகிய 'அல்லைப்பிட்டிக்கு' மின்சாரமும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் வருகை தராத காலத்தில் அந்தக் கிராம மக்களை மெய்மறக்கச் செய்த பாடல்களில் இதுவும் ஒன்று.அந்தக் கிராம மக்களில் ஓரளவுக்கேனும் வசதி படைத்தவர்களின் வீடுகளில் வானொலிப் பெட்டிகள் இருந்தன. 1970 களில் இலங்கை வானொலி தனது ஒலிபரப்புச் சேவையை இலங்கையின் வடபகுதி மக்களுக்கும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கும் என விரிவு படுத்தியபோது தனது அஞ்சல் சேவை பரிவர்த்தனை நிலையத்தை எங்கள் அயற் கிராமமாகிய மண்டைதீவில் அமைத்தது. இதனால் ஒரே நாளில் 'மண்டைதீவு' என்னும் கிராமத்தின் பெயர் அகில இலங்கை முழுவதும் பிரபலம் அடைந்தது.
இலங்கையின் வடபகுதி மக்கள் மட்டுமன்றி, தமிழக மக்களும் வானொலிப் பெட்டிகள் வாங்கத் தொடங்கினர். ஏழைகள் தவிர்ந்த மற்றைய அனைவருக்கும் 'ரேடியோ' ஒரு பொழுதுபோக்குச் சாதனமாக மாறத் தொடங்கியது. அக்காலத்தில் தெருவில் போகும்போதும், வரும்போதும் அண்டை அயலாரின் வீடுகளில் இருந்த ரேடியோக்களில் இருந்து ஒலித்த, என் நெஞ்சில் இடம்பிடித்த முக்கியமான பாடல்களில் இதுவும் ஒன்று.
காணொளி உதவிக்கு நன்றி:sittukkuruvi
Disclaimer/சட்டபூர்வ உறுதிமொழி: The video clip is posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I (R.S.Lingathasan) don't wish to violate any copyright owned by the respective owners of this song. I don't own any copyright of the song. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from our blog.
Disclaimer/சட்டபூர்வ உறுதிமொழி: The video clip is posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I (R.S.Lingathasan) don't wish to violate any copyright owned by the respective owners of this song. I don't own any copyright of the song. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from our blog.
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பும் பத்மினி அம்மாவின் அழகும் என்னைவிட மூத்த தலைமுறையினரின் நினைவில் வந்து போவது உறுதி. எனது நினைவில் 'ஈழத்து சிவாஜி' என்று அழைக்கப்பட்ட 'நடிகமணி' V.V.வைரமுத்து அவர்கள் வந்து போகிறார். ஏனெனில் எங்கள் கிராமத்திலும் அயற் கிராமங்களிலும் மேடை நாடகங்கள் இடம்பெற்றபோது 'நடிகமணி' குழுவினரின் நாடகத்தில் இந்தப் பாடல் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.
சமர்ப்பணம்: ஈழத்திலும் ஆற்றல் மிக்க கலைஞர்கள் இருக்கிறார்கள் என தமிழ்கூறு நல் உலகத்திற்கு முதலில் அறிவித்த நடிகமணி அமரர்.V.V.வைரமுத்து அவர்களுக்கும், எனது வகுப்பில் இந்தப் பாடலை "முல்லை மலர் மேலே முத்தன் பொண்டில் கீழே" என நகைச்சுவையாகப் பாடி என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஆனால் வாழ்க்கை விளையாட்டிலும், சமூக அங்கீகாரத்திலும் தோற்றுப் போய்விட்ட என் நண்பர்களுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக