திங்கள், ஜூன் 20, 2011

தாய்லாந்துப் பயணம் - 6

 க்கம் வேதா. இலங்காதிலகம்


பேருந்தில் நாம் ஒரு மேம்பாலத்தில் உயரத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். எமது அருகோடு இன்னொரு மேம்பாலம். தூரத்தில் பார்த்தால் பாம்பு வளைவுகளாக அழகாகப் பல மேம்பாலங்கள். மேலிருந்து பார்த்து ஆ! வென்று வாய் பிளந்தோம்.
இங்கு தொலைக்காட்சியில் சென்னை நகர ஓரு மேம்பாலத்தை அடிக்கடி பார்க்கிறோமே, அப்படி தாய்லாந்தில் பல மேம்பாலங்கள்.
லூட்ஸ் பாதையில் யேர்மனியில் நாம் முன்பு பார்த்தது குட்டிக்குட்டி மேம்பாலங்கள். இது மிகப் பெரியது. ஒரு இடத்தில் நான்கிற்கும் மேற்பட்ட பாலங்கள் தென்பட்டன. ஏதோ வெள்ளப் பெருக்கிற்குப் பயந்து, சதுப்பு நிலத்திற்காக இப்படிப் பல பாலங்களைக் கட்டினார்களோ என்றும் தோன்றியது. பாங்கொக் ஒருமேம்பாலங்களின் நகரம் என்பது என் கருத்து.
இது மட்டுமல்ல……                                            
 உயர் கட்டிடங்களோ எண்ணுக் கணக்கற்றவை. அம்மாடி! இந்தப் பக்கம் பாருங்கள்! அந்தப் பக்கம் பாருங்கள்! என்று கூறிக் கூறிப் பார்த்து இதற்கும் வாய் பிளந்தோம்.
ஓரே உயர் மாடிக் கட்டிடங்கள் தான் போங்கள்! மேலே உயர் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து பேருந்து ஓட முதல் கீழேயும் பார்த்திடலாம் என்று பார்த்தால்
                     
……”.’ இதென்ன! தரை தகரமாகக் கிடக்கே!’ ……என்றேன்.
….” வடிவாகப் பார்! கீழே குடிமனைகள் இருக்கிறது”… என்றார் என் கணவர்.
…..” ஓமப்பா! இதென்ன! ஆச்சரியம் இந்த ஒற்றுமை வேற்றுமை!’ ‘….என்றேன் நான்.
பாங்கொக் ஒரு உயர் கட்டிடங்களின் நகரம் என்பதும் என் கருத்து.                                                               
இதை விட சதுப்பு நிலத்தில் கம்புகள் நட்டு அதன்மேல் வீடுகள் கட்டியும் மக்கள் வாழ்வதும் தெரிந்தது. தண்ணீர் தேங்கி நிற்கும் நிலங்களாகவும், வயல்களாகவும் இருந்தது. இந்தப் பாதையில் அதிக உயரமற்ற தென்னை மரங்கள் இருந்தன. இந்த வியப்புகளைப் பார்க்கும் போது பாங்கொக்கில் தங்கிட நாம் சரியான இடத்தைத் தான் தெரிவு செய்துள்ளோம் என்ற திருப்தி உண்டானது.
நமது வாடிவீட்டு முகவரியைக் காட்ட அதற்குக் கிட்டவாகப் பெருந்தெருவில் எம்மை இறக்கி விட்டனர். ஏழு, எட்டு நிமிட நடையில் வாடிவீட்டை மாலை ஆறு மணிக்கு அடைந்தோம்.
The Best Bangkok house ஏழு மாடிக்கட்டிடம் தான். எமக்கு 4வது மாடியில் அறை. 
கட்டிலின் கால்மாட்டில் பாதிரிப்பூ மாதிரி மரூண் நிறத்தில் தனிப் பூவும், ஒரு தடவை வீட்டின் உள்ளே பாவித்து வீசும் பாதணிகளும் இருந்தது. நமது இரண்டு பேரின் தலையணை மேலே ஒல்வொரு பூவும், கட்டிலுக்கு அருகில் உள்ள சிறு மேசையிலும் ஒற்றைப் பூவுமாக அறை அலங்கரித்து இருந்தது.  சிறிய அறை தான்.
குளித்து ஆடை மாற்றி வெளியே கிளம்பினோம். தெருக்களைச் சிறிது சுற்றிப் பார்த்தோம். கைத் தொலைபேசியைப் பாவிக்க அட்டைகள் எல்லாம் வாங்கினோம். குடிக்கத் தண்ணீர், பழங்களுடன் அறைக்கு வந்து பிள்ளைகளோடு அமைதியாகக் கதைத்தோம்.
அதன் பின்பு வெளியே போய் இரவு உணவும் சாப்பிட்டுவிட்டு ஆறுதலாக அறைக்கு வந்தோம். குளிரூட்டி அறையாதலால் நன்கு குறைந்த அளவில் அதைச் சரிக்கட்டிக் கொண்டு அடுத்த நாள் வேலைத் திட்டங்களைப் பேசினோம்.
7.00 மணிக்கு அந்த வானொலி கேட்க வேண்டும்,  இந்தத் தொலைக் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஒரு சிந்தனையுமின்றி இரவு நிம்மதியாகப் படுத்துத் தூங்கினோம்.
அடுத்த நாள் முதலாம் திகதி அழகாக விடிந்தது. CNN ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் கேட்க முடிந்தது. தாய் மொழியிலும் (தாய்லாந்து) செய்திகளைக் காட்சியுடன் பார்த்தோம். 
வாடிவீட்டிலேயே காலையுணவு வசதியுடனே தான் அறையை எடுத்தோமாதலால் ஆறுதலாகப் போய் காலையுணவாக பாண்  பழ கலவை முட்டையென எடுத்தோம். கறுவா தூள் மட்டும் கொண்டு போயிருந்தோம், காலை உணவுடன் தவறாமல் அதையும் எடுத்தோம்.                           
—பயணம் தொடரும்—   

12 கருத்துகள்:

Uthayan, Germany சொன்னது…

very interesting

Sahana, 8005 Zurich (Switzerland) சொன்னது…

Very good

Mohan, Denmark சொன்னது…

Keep it up..

vinothiny pathmanathan dk சொன்னது…

உங்கள் கட்டுரையை வாசிப்பதால் ஒரு பைசா செலவில்லாமலே பாங்கொக் போய் வந்த மாதிரி இருக்கிறது .அதே நேரம் தாய்லாந்திற்கு வாழ்வில் ஒருதடவையாவது சென்று வரவேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்துகிறது . மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது .பாராட்டுக்கள் வேதா

Ramesh, DK சொன்னது…

அருமையான தொடர்

Kamala, Melbourne சொன்னது…

like it

Rogni Denmark சொன்னது…

nallagtukerathu. vallathukkal.

Seelan, Stuttgart சொன்னது…

நல்லா இருக்கிறது

Anu, USA சொன்னது…

Dear writer Vetha,
I've never been in Thailand, but when I read your travel experiences, I'm tempted to go there. You have a really good storytelling technique, that captures the reader's attention. Hats off to you.

I also Thank anthimaalai.dk for bringing the hidden artist for the world.

Kovaikkavi- Denmark. சொன்னது…

all the kind comments touching my heart.If you like joined with me in Face book.
Vetha Elangathilakam
எல்லோரது கருத்துகளும் இதயத்தைத் தொடுகிறது. முகநூலில் விரும்பினால் இணையுங்கள். கருத்துகளுக்கு மனமார்ந்த நன்றி. இது 6வது அங்கம் தானே! 21 அங்கங்கள் இருக்கிறது...நிறையச் சுவை காத்திருக்கிறது. தெரிந்தவர்களுக்கும் கூறுங்கள் உதயன், சகானா( இந்தப் பெயர் பிடிக்கும்)அமுதா, மோகன், சதாசிவம், விநோதினி, ரமேஷ்,கமலா, ரோகினி, சீலன், அனு இன்னும் வரப்போகும் அனைவருக்கும் நன்றி. ஆண்டவன் ஆசி அனைவருக்கும் கிட்டட்டும்.

Arul, DK சொன்னது…

I love to read your story, Vetha.

vetha.-dk சொன்னது…

Nanry Arul. Best wishes.God bless you.

கருத்துரையிடுக