செவ்வாய், பிப்ரவரி 15, 2011

நாடுகாண் பயணம் - பார்படோஸ்

நாட்டின் பெயர்:
பார்படோஸ் (Barbados)

அமைவிடம்:
வட அத்திலாந்திக் சமுத்திரம்.

எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் கரீபியன் கடல், இருப்பினும் அருகாமையில் உள்ள நாடுகளாக வின்வார்ட் தீவுகள்(Windward Islands), சென் வின்சென்ட்(St.Vincent), கிறேனாடின்ஸ்(Grenadines) ட்ரினிடாட் மற்றும் டொபாகோ(Trinidad and Tobago) போன்றவற்றைக் கூறலாம்.

பரப்பளவு:
431 சதுர கிலோமீட்டர்கள்.

தலைநகரம்:
பிரிட்ஜ் டவுன் (Bridgetown)

அலுவலக மொழி:
ஆங்கிலம் 

அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழி:
பஜன் (Bajan)

கல்வியறிவு:
100 %

சனத்தொகை:
284, 589 (2009 கணக்கெடுப்பு)

இனங்கள்:
ஆபிரோ பஜன்: 80 %
ஆசியர்கள், முலாட்டோ, அரவாக், மற்றும் கலப்பு இனங்கள்: 16 %
ஐரோப்பியர்கள்: 4 %

ஆயுட்காலம்:
77 வருடங்கள் 

சமயங்கள்:
கிறீஸ்தவம்: 95 %
ஏனையவை: இந்துக்கள், முஸ்லீம்கள், பஹாய், யூதர்கள்.

ஆட்சி முறை:
அரசியின் ஆட்சிக்குட்பட்ட, பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி.

நாட்டின் தலைவி:
மேன்மை தங்கிய இரண்டாவது எலிசபெத் (இங்கிலாந்து இராணி)

ஆளுநர்:
கிளிப்போட் ஹஸ்பாண்ட்ஸ்(Clifford Husbands)

பிரதமர்:
புரூன்டேல் ஸ்டுவார்ட் (Freundel Stuart) 
சுதந்திரமடைந்த தேதி:
30.11.1966 (ஐக்கிய இராச்சியத்திடமிருந்து)

நாணயம்:
பார்படியன் டொலர் (BBD)

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
001-246 

பிரதான வருமானம் தரும் தொழில்:
சுற்றுலாத்துறை

இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், எரிவாயு, மீன்பிடி.

ஏற்றுமதிப் பொருட்கள்:
கரும்பு, சீனி, மதுபானம், உணவுப் பொருட்கள், இரசாயனப் பொருட்கள், மின்சார உபகரணங்கள்.

சிறு குறிப்புகள்:
  • உலகப் புகழ்பெற்ற பொப் பாடகியும், நடனத்தாரகையுமாகிய ரிகானா(Rihanna) இந்நாட்டைச் சேர்ந்தவர்.
  • இந்நாடு போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளாலும் ஆளப்பட்டது.
  • உலகில் அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இதுவும் ஒன்று.
  • உலகில் பணக்கார நாடுகளின் வரிசையில் 51 இடத்தில் உள்ளது.
  • கல்வியில் 100 % முன்னேறிய நாடுகளில் இதுவும் ஒன்று.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக