புதன், செப்டம்பர் 28, 2011

ஆன்மிகம் - 2


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
சக்திகளின் இரவுகள்

க்திகளின் இரவுகள் நவராத்திரி. முத்தியுடை முதல் மூன்றும் வீரஇரவுகள். ஆண்டி முதல் அரசனும் ஆதரிப்பது. ஆங்காரம் அழித்து அனுக்கிரகமாவது. ஆளும் வினை பொடிக்கும் சூலக்காரிமகிசாசுரமர்த்தனியின் மகாராத்திரி.மகாசக்தி காளியின் தைரிய இரவுகள்.
மகாதேவி துர்க்காவின் மூன்று இரவுகள்.
செல்வத்திருமகளின் நடு மூன்று இரவுகள்செயங்கள் சேர்க்கும் ஐசுவரிய இரவுகள்.செந்தாமரை நாயகிக்குச் சேவைகள் புரிந்துசெழிப்பை, அதிஷ்டத்தைத் தனதேவியிடம்செறிவான நவமணி நுகர்ச்சி தேடல்.செல்வம் குவியென திருமால் நாயகியிடம்சேர்த்தவை காத்து, வரங்கள் கேட்கும்
சொர்ண சொரூபி இலட்சுமியின் இரவுகள்.

டை மூன்றிரவுகள் வெண்கலை வாணியின்
கடாட்சம் குவித்து கலைகளை வேண்டுதல்.
கல்வி முதலாம் காணும் கலைகள்
நல்கும் கலைமகள், படைப்போன் நாயகி.
எல்லா வித்தைகளும் விஐயதசமியில்
வித்யாரம்பமாய் நவராத்திரி முடியும்.
வெண்மலர்த் தேவி, ஞான வாணியை

வேண்டுவோர் விருப்பு வெற்றியாய் முடியும்.
(2007 ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியில் திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களால் வாசிக்கப்பட்டது)

2 கருத்துகள்:

அபிராம் சொன்னது…

அருமை...

V. Gayathiry, USA சொன்னது…

நவராத்திரி தொடங்கும் இந்தநாளில் இப்படி ஒரு சிறப்பான ஆக்கத்தை எழுதிய வேதா மேடம் மற்றும் அந்திமாலை இணையத்திற்கு நன்றிகளோடு பாராட்டுக்களும்.

கருத்துரையிடுக