சனி, செப்டம்பர் 03, 2011

கவிதைக்குப் பொய்யழகு - 2

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

வாலமீகி இராமாயணத்தில் இரணியன் பற்றி விளக்கமில்லை. கம்பராமாயணத்தில் இரணியப் படலம் சிறப்படைய தனிப்படலமாக போற்றப் படுகிறது.
திருமணத்தின் முன் இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் பர்த்ததாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படவில்லை.
ம்பராமாயணத்தில் மிதிலா நகரில் விசுவாமித்திர முனிவருடன் இராமர் சென்ற போது கன்னிமாடத்தில் நின்ற சீதை, அண்ணலும் நோக்க  அவளும் நோக்கினாளென, அவர்கள் திருமணத்தைக் காதற் திருமணமாகத் தனது கவிதைக் காவியத்தில் கம்பர் புனைந்துரைத்துள்ளார். அந்தப் பொய்யழகு உலகில் உயர் காதற் காவியமாகப் பேசப்படுகிறது. 
னுமான் சீதையைக் காணத் தூது போகும் போது    ‘ இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறி, நீ எனது தூதுவனென்று சீதை நம்பும்படி பேசு’.. என்று இராமன் வாயிலாகவே இதை மறுபடி கம்பர் வலியுறுத்திக் கூற வைக்கிறார்.
ஞ்சவடியில் சீதையை இராவணன் கைகளாற் பற்றித் தூக்கிச் சென்றதாக வால்மீகி கூறியுள்ளார். சீதைக்கு அது மாசு என்ற காரணத்தால், தமிழ் மக்கள் மனதில் சீதை தாழ்ந்து போவாளென்று அஞ்சிய கம்பர் சீதையிருந்த பர்ணசாலைக் குடிசைத் தரையோடு பெயர்த்துக் கொண்டு சென்று, அசோகவனத்தில் சீதையைச் சிறை வைத்தான், அவன் அவளைத் தொடவில்லையென்றும் எழுதியுள்ளான்.
தைச் சடாயுவும் இறப்பதற்கு முன், சீதையைப் பர்ணசாலையுடன் தூக்கிச் சென்றதாகக் கூறுகிறான். அனுமானும் திரும்பி வந்து ‘உன் தம்பி கட்டிய         பர்ணசாலையில் சீதை இருக்கக் கண்டேன்’..என்று கூறுவதாகக் கம்பர் எழுதியுள்ளார்.
ப்படியாகப்பொய்கள் தொடருகிறது. நான் படித்து அறிந்ததை எனது மொழியில், தெரியாதவர்களுக்காகத் தந்துள்ளேன் என்பதை இங்கு அறியத் தருகிறேன்

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கம்பர் தமிழ் மரபு காக்க கவிதையில் பொய்கலந்தார் தவறில்லை! தங்கள் விளக்கம் நன்று!

vinothiny pathmanathan dk சொன்னது…

nanru. .

Vetha. Elangathilakam. சொன்னது…

அன்புடன் தளிர், விநோதினி மிகுந்த நன்றியும் மகிழ்ச்சியும் உங்கள் கருத்திற்கு. இறை அருள் கிட்டட்டும்.

கருத்துரையிடுக