வெள்ளி, பிப்ரவரி 01, 2013

மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்

புகைத்தல் மற்றும் மதுபான பழக்க வழக்கங்களினால் ஏற்படும் தீங்குகள் ஏராளம். இவை மனித ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் பரந்துபட்ட சமூக மட்டத்திலும் அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அத்துடன் மனிதனின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
மேற்கத்தேய கலாசாரத்தின் உள்வாங்கலே புகைத்தல், மதுபான பழக்க வழக்கங்கள் என்பனவாகும்.
 
புகைத்தல் மற்றும் மதுபானம் இலங்கை மக்களின் ஆரோக்கியத்திலும் சமூக, கலாசார, பண்பாட்டு விழுமியங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இது தொடர்பாக ஊடகங்களில் சுட்டிக்காட்டி  செய்திகள் இடம் பெறுகின்றன. சமூகத்திலும் பொதுவாகக் காணக் கூடியதாக உள்ளது.
 
அண்மையில் பாடசாலையொன்றின் சித்திரக் கண்காட்சியை திறந்து வைத்து சுகாதார அமைச்சர் மதுபானம் மற்றும் புகைத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பாதிப்புக்கள் தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளார்.
 
தொற்றல் அல்லாத நோய்களால் ஏற்படும் மரணங்களில் 75 சதவீதமானவை புகைத்தல் மற்றும் மதுபானங்களால் ஏற்படும் மரணங்கள் என்று சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
 
அமைச்சர் அங்கு தெரிவித்துள்ள கருத்துக்களில் சில வருமாறு,
 
புகைத்தல், மதுபான பழக்கவழக்கங்கள் நாட்டில் வறுமை மற்றும் போசாக்கின்மை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன. இவை இரண்டின் காரணமாகவும் இலங்கையில் மாதாந்தம் 7875 பேர் மரணமாகின்றனர்.
 
இதன்படி தினமொன்றுக்கு 263 பேர் புகைத்தல் மற்றும் மதுபானம் காரணமாக இறக்கின்றனர். இது தவிர பல்வேறு காரணங்களினால் இலங்கையில் தினமொன்றுக்கு 950 பேர் வரை (மாதத்திற்கு 28500 பேர்) மரணமாகின்றனர். இதேவேளை மாதத்திற்கு 36 ஆயிரம் குழந்தைகள் நாட்டில் பிறக்கின்றன.
 
இதய நோய்கள், புற்று நோய், நீரிழிவு, நிறுநீரக பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற தொற்றல்லாத நோய்கள் ஏற்படுவதற்கு மதுபானம் மற்றும் புகைத்தல் என்பன காரணமாக அமைந்துள்ளன.
 
அரசாங்கம் போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்படுகின்றன என்று சுகாதார அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, மதுபானம் அருந்துதல் காரணமாக நோய் வாய்ப்பட்டு அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரிடமிருந்து பணம் அறவீடு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு பல மாதங்களுக்கு முன்னர் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
புகைத்தலினால் ஏற்படும் அபாயம் அல்லது தீங்குகள்
 
  • புகைபிடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட 5 மடங்கு அதிகமாக உள்ளது.
  • புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.
  •   கண்களில் வெண்புரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 
  • ஆஸ்த்துமா நோயின் தீவிரம் அதிகரிக்கும்.
  • சுவாசப்பை புற்று நோய் ஏற்படலாம்.
  •   முரசு வீங்குதல், முரசு கரைதல், வாய்நாற்றம் ஆகியவற்றை தோற்றுவிப்பதுடன் பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாக அமைகிறது.
  •  மலட்டுத்தன்மை ஏற்படலாம்
  • நீரிழிவு, புற்று நோய், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு உட்பட மேலும் சில தொற்றல் அல்லாத நோய்கள் ஏற்படலாம்.
  • சிகரட் புகையில் ஏறக்குறைய 4800 வேதிப் பொருட்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை இருதயத்திற்கும் இரத்த குழாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இவை இரத்தக் குழாய்களை குறுக்கி விடுகின்றன. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
  • நிகோடின் இரத்தக் குழாய்களை குறுக்குவதால் இதயத்தை அதிக வேலை செய்ய வைக்கிறது. இதனால் இயத் துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
  • சிகரட் புகையில் இருக்கிற கார்பன் மோனாக்சைட் இரத்தத்தில் இருக்கின்ற ஒட்சிசனை வெளியேற்றி விடுகிறது.இதனால் தேவையான ஒட்சிசனை பெற இதயம் அதிகளவில் வேலை செய்ய வேண்டியுள்ளது.
  •   உலகில் 10 வினாடிகளுக்கு ஒருவர் புகைத்தலினால் இறக்கின்றனர்.
  • இவை தவிர சிகரட்டிற்கு தினசரி பெரும் தொகை பணம் செலவிடப்படுவதால் தனி மனிதனின் பொருளாதார பாதிக்கப்பட்டு குடும்பத்தையும் பல்வேறு வகைகளில் பாதிக்கிறது.
 
மதுபானத்தினால் ஏற்படும் விளைவுகள் சில
 
  • வருமானத்தின் பெரும் பகுதி மதுவுக்கு செலவிடப்படுகிறது. அது குடும்ப பொருளாதாரத்தை பாதிக்கிறது. போசாக்கின்மை, குடும்ப பிரச்சினை, சிறுவர் உரிமை மீறப்படல், குடும்ப வன்முறை, குடும்பத்தில் பிளவு உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
 
  • அடிக்கடி நோய்களுக்கு ஆளாக வேண்டி ஏற்படுகிறது. இதன்  காரணமாக... மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக