செவ்வாய், பிப்ரவரி 26, 2013

ராகு, கேது யார்?

ராகு, கேது இரு கிரகங்களும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படக் காரணமான கிரகங்களாகும். ஒன்பது கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் சாயாக் கிரகங்கள் எனப்படும். வானவெளியில் இதற்கென மண்டலங்கள் கொடுக்கப்படவில்லை. வானவெளியில் சூரியனது வட்டப் பாதையும் சந்திரனது வட்டப் பாதையும் வெட்டும் புள்ளிகளே ராகு, கேது என அழைக்கப் படுகிறது. சூரியனுடைய வட்டப் பாதையை சந்திரன் 5 பாகை 9 கலை தூரத்தில் தெற்கு வடக்காக சாய்ந்து நின்று இரண்டு இடங்களில் கடந்து செல்கிறார். சூரியனின் பாதையை சந்திரன் இருமுறை கடந்து செல்லும் இந்த இடமே ராகு, கேது என அழைக்கப்படுகிறது.

சூரிய வட்டப்பாதையை சந்திரன் கடக்கும் இடமானது ஒவ்வொரு நாளும் வெவ்வேறாக இருக்கும். சந்திரன் இன்று கடக்கும் இடத்தில் நாளை கடப்பதில்லை. நாளை கடக்கும் இடத்தில் மறுநாள் கடப்பதில்லை. சந்திரன் கடக்கும் இந்த இடமானது ஒரு நாளைக்கு 33 விகலை வீதம் தள்ளிக் கொண்டே வரும். இப்புள்ளியானது ஒரு மாதத்திற்கு 1 பாகை 40 கலை தூரத்திற்கு நகரும். பதினெட்டு மாதத்தில் இது 30 பாகை சென்று விடும். 30 பாகை கொண்டது ஒரு ராசி ஆகும். இதனால்தான் ராகு, கேதுக்களானது ஒரு ராசியைக் கடக்க 18 மாதங்களாகின்றது. அதாவது 1 1/2 ஆண்டுகளாகின்றது. பன்னிரெண்டு ராசிகளையும் ராகு, கேது என்ற வெட்டும் புள்ளி சுற்றிவர பதினெட்டு வருடங்களாகின்றது.


நன்றி: neerkondar.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக