வெள்ளி, செப்டம்பர் 14, 2012

மரண அறிவித்தல்

இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 
கல்மடு, விசுவமடு, கோப்பாய், திருநெல்வேலி ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த 
திரு.சின்னத்தம்பி செல்லத்துரை (சாத்திரியார்) அவர்கள் 
நேற்றைய தினம்(13.09.2012) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

தோற்றம்: 03.07.1942 
மறைவு: 13.09.2012

அன்னார் காலஞ்சென்ற திரு. சின்னத்தம்பி திருமதி. சிவக்கொழுந்து (அல்லைப்பிட்டி ஆச்சி) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் நாகமுத்து தம்பதியினரின் அருமை மருமகனும்,

குணமணியின் அன்புக் கணவரும், 

வளர்மதி, மதியழகன்(மலேரியா தடுப்புப் பகுதி உத்தியோகத்தர்/கிளிநொச்சி), இந்துமதி(ஆசிரியை, வவுனியா சமளங்குளம் அ.த.க.பாடசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து(அல்லைப்பிட்டி) காலஞ்சென்ற இராமலிங்கம்(மண்டைதீவு), காலஞ்சென்ற தம்பிஐயா(மண்டைதீவு), காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி(அல்லைப்பிட்டி), காலஞ்சென்ற இராசம்மா(யோகபுரம்,மல்லாவி), காலஞ்சென்ற தங்கம்மா(விசுவமடு),காலஞ்சென்ற தெய்வானை(அல்லைப்பிட்டி), காலஞ்சென்ற நாகம்மா(மண்டைதீவு), திருமதி.சிவகுரு கனகம்மா(மண்டைதீவு), காலஞ்சென்ற துரைசிங்கம்(மண்டைதீவு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகானந்தம்(ஆசிரியர், யாழ்/நல்லூர் இந்து பெண்கள் வித்தியாலயம்), குணரூபன்(ஆசிரியர், கிளி/புன்னைநீராவி வித்தியாலயம், விசுவமடு), சிவதர்ஷினி(மருந்துக் கலவையாளர், கோண்டாவில் வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தங்கமுத்து, மகேஸ்வரி, பத்மநாதன், விஜயலட்சுமி, நடராசா, கமலாம்பிகை, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

கிஷானா, பிரணவன், சுவாதிகா, மகீபன், கிருஷ்ணவி ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம்(16.09.2012 ஞாயிற்றுக் கிழமை ) முற்பகல் 11.00 மணியளவில் விசுவமடுவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக விசுவமடு 12 ஆம் கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

தகவல்: திருமதி.சாருமதி சொர்ணலிங்கம்(மருமகள்), திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

மேலதிக தொடர்புகளுக்கு:

குணமணி (மனைவி): 0094 - 779 156 161

வளர்மதி (மகள்): 0094-774 918 019

மதியழகன் (மகன்): 0094- 778 860 996

7 கருத்துகள்:

Seetha சொன்னது…

என் மாமா எங்கு சென்றிர்கள்,

நான் தாயை இழந்தாலும் என் மாமா இருக்கிறார். என்று ஆனந்தம் அடைந்தேன்
இப்போ நீங்களும் ஓடி மறைந்திர்களே?,இனி நாங்கள் மாமா என்று அழைக்க யார் இருக்கிறார்? நான் உங்களிடம் வந்து சாப்பிட்டதை மறப்பனோ? நீங்கள் எனக்கு தேனீர் தந்ததை மறப்பனோ? மாமா கொடிய நோய் வந்து உங்களை அழைத்து சென்றதே மாமா,,,,,,,,,,,,,, மாமா...........









Vasanth Ruban சொன்னது…

வாழ்வு இலக்கணத்தின் எளிய உதாரணம்
வாழ்வில் எமக்கு உறவாய் கிடைத்த வரம்
வாழ்ந்துகாட்டி வழிப்படுத்தி நின்ற சொந்தம்
தாழ்ந்துபோனதில்லை எம்மீது உங்கள் நேசம்
தோழமை என்னும் ஆயுதத்தால் நீங்கள்
கைப்பற்றிய உள்ளங்கள் ஏராளம் ஏராளம்
அழுதவன் தேறுவான் உன்முகம் கண்டு
அழுகின்றோம் உறவுகள் நாம் இங்கு
தேற்றுவார் எவருண்டு எமக்கிங்கு
வேண்டும் வரமொன்று எமக்கிங்கு
ஏழேழுபிறப்பிலும் நீங்கள் எங்கள் உறவென்று!!!

Vijayaratnam சொன்னது…

Our sincere and heartfelt condolences...
by Vijayaratnam family..

Selvalingan Nadarajah சொன்னது…

நண்பன் சி .செல்லத்துரை அவர்களின் மறைவு வேதனை அளிக்கின்றது ,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்

Mathan சொன்னது…

MY friend Sasthiry is death am very shocked, i cant blief, i pray for God

Jeyakumar சொன்னது…

அன்பு உள்ளம் கொண்ட அன்பர் சாத்திரியாரே!
அமலனுக்கு அமுதழித்த அன்னையின் பெயரால்
பூம்புகார் பதிகம் குடிகொண்ட கண்ணகையின் ஆலய‌த்தில்
ஆண்டுதோறும் அன்னத்தை அள்ளிவளங்கிய கரங்களை
எப்போ எங்கே என்று காண்போமோ.........
எங்கள் எல்லோர் மனத்திலும் உதட்டிலும்
நிறைந்திருந்த சாத்திரியாரெனும் சொல்லின் செல்வரே
எம்மைவிட்டு நெடுந்தூர‌ம் சென்ற‌தும் ஏனோ
யாருக்கு யாரால் ஆறுத‌ல் கூறுவ‌து
எல்லாம் தாயவள் க‌ண்ணகையின் பாத‌த்திற்கே......

Uthayan சொன்னது…

I pray for his soul my hearty condolences.

கருத்துரையிடுக