மனிதனோட மிகப்பழமையான உணவுகள்ல முக்கியமானது, வெங்காயம். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததால, பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமா சாப்பிட்டாங்க.
ரோமைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள், வெங்காயத்தை அரைச்சி, உடம்புல பூசிக்குவாங்களாம்.
உடல்வலிமையை அது கூட்டும் என்ற நம்பிக்கை தான் காரணமாம். வெயில்ல அலைஞ்சி திரிஞ்சி, வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள்ள வந்ததுமே சிலருக்கு நீர்ச்சுருக்கு வந்துடும்.
ஒரு வெங்காயத்தைப் பொடியா நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீர்ல போட்டு கொதிக்க வச்சி, அந்தத் தண்ணீரைக் குடிச்சா நீர்க்கடுப்பு உடனே நின்னுடும்.
வெங்காயத்தை தண்ணீர்ல போட்டு கொதிக்க வைக்குற அளவுக்கு பொறுமை இல்லையா? அப்படியே பச்சையாக வெங்காயத்தை மென்று தின்னுங்கள்.
சில நிமிடங்களில் நீர்க்கடுப்பு காணாமல் போயிடும். வெயில் காலத்துல உடல்ல ஏற்படுற கட்டிகளுக்கு வெங்காயம் மூலமா நிவாரணம் பெறலாம்.
வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கொப்புளங்கள்ல பூசினா, கொப்புளம் உடைந்து சீழும், கிருமிகளும் வெளியேறும். வெங்காயத்தை துண்டுகளாக்கி, நெய்யில் வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு தணியும்.
நன்றி: இதயபூமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக