ஞாயிறு, மார்ச் 18, 2012

உகாண்டா to சென்னை...


கடந்த இரண்டு மாதமாக என்னால் பதிவு எழுத முடியவில்லை. அதற்கு நான் சொல்லும் ஒரே காரணம், 'என் கல்யாணம்' தான். திருமணம் முடிந்து உகாண்டா வந்த பிறகு இன்று பதிவு எழுதலாம், நாளை பதிவு எழுதலாம் என்று ப்ளான் போட்டேனே தவிர, பதிவு எதுவும் எழுதுவதற்கு நேரம் போதவில்லை. அது மட்டுமல்ல, எதை பற்றி எழுதுவது என்ற சிந்தனை வேறு. அதனால் தான் உகாண்டாவிலிருந்து சென்னைக்கு கிளம்பியதில் ஆரம்பித்து, திரும்பி வந்தவரைக்கும் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை எழுதலாம் என்று நினைக்கிறேன். அதுவும் இந்த பதிவின் வரவேற்ப்பை பொறுத்து தான் என் அடுத்த பதிவை எழுதுவேன்.

எனக்கு திருமணம் முடிவானவுடன், அனைவரும் என்னிடம் கேட்ட முதல் கேள்வி "எப்ப இந்தியாவிற்கு வர்ற?' என்பது தான். ஆனால் எனக்கு, யாருக்கும் தெரியாமல்இந்தியாவுக்கு வந்து அனைவருக்கும் 'சர்ப்ரைஸ்' தரவேண்டும் என்று நினைத்தேன்.அதனால் என் அண்ணனுக்கு மட்டும் (பெரியப்பா மகன்) நான் வரப்போகும் தேதியை தெரிவித்துவிட்டு, "இதை யாரிடமும் சொல்லக்கூடாது" என்று சொல்லிவிட்டுஇந்தியாவிற்கு கிளம்ப தயாரானேன். என் அண்ணனுக்கும் நான் சொன்ன 'சர்ப்ரைஸ் ப்ளான்' பிடித்திருக்கவே அவரும் 'சரி' என்று சொல்லிவிட்டார். என் அப்பா, அம்மா,தங்கைகள், உறவினர்கள், என் மனைவியாகப் போகிற என் காதலி, என் நெருங்கியநண்பன் என்று யாருக்கும் சொல்லவில்லை என்பது தான் 'ஹைலைட்'. ஆனால் நான்ஊருக்கு கிளம்ப இருந்த சில நாட்களுக்கு முன்பு என் அப்பா என்னிடம் "நீ எப்பவர்றேன்னு எனக்கு மட்டும் சொல்லு, நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்" என்றுரொம்ப வேண்டிக் கேட்டுக்கொண்டதால் நான் இந்தியாவிற்கு எப்போது வருகிறேன் என்று அவரிடம் சொல்லி தொலைத்து விட்டேன்.
ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா? என் உறவினர்களுக்கு போன் போட்டு "வர்ற ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் வீட்டுக்கு வந்துருங்க, எல்லாருக்கும் நம்ம வீட்ல தான்சாப்பாடு. உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் காத்திட்டிருக்கு" என்றுசொல்லிவிட்டார். இதை கேள்விப்பட்டு அவருக்கு போன் போட்டு "ஏம்பா?' என்றுகேட்டால், "நான் எதுவும் சொல்லலையே?' எல்லாரையும் சாப்பாட்டுக்கு மட்டும் தான்கூப்பிட்டேன். இதிலென்ன இருக்கு? என்று என்னையே திருப்பி கேட்கிறார் மனிதர். "நீங்க ஆணியே புடுங்க வேணாம்பா" என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.அப்பவாவது அவர் சும்மா இருந்தாரா? திரும்பவும் என் உறவினர்களுக்கு போன் போட்டு "சன் டே யாரும் வரவேண்டாம். சர்ப்ரைஸ் எல்லாம் ஒண்ணும் இல்ல" என்றுசொல்லி நான் அன்று இந்தியாவிற்கு மேலும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக