நாட்டின் பெயர்:
பின்லாந்து (Finland)
*நாட்டின் ஆங்கிலப் பெயரின் தொடக்கத்தில் F எனும் எழுத்து வருவதால் தமிழில் எழுதும்போது ஃபின்லாந்து என எழுதப்பட வேண்டும்.
வேறு பெயர்கள்:
பின்லாந்துக் குடியரசு (Republic of Finland)
அமைவிடம்:
வடக்கு ஐரோப்பா
எல்லைகள்:
மேற்கு - சுவீடன்
கிழக்கு - ரஷ்யா
வடக்கு - நோர்வே
தெற்கு - பின்லாந்துக் குடாக் கடல் மற்றும் கடலுக்கு அப்பால் எஸ்தோனியா
தலைநகரம்:
ஹெல்சிங்கி (Helsinki)
மொழிகள்:
பின்னிஷ்(Finnish) மற்றும் சுவீடிஷ்(Swedish)
அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழி:
சௌமி (Saami)
இனங்கள்:
பின்னர்கள் 93,4%
ஸுவீடியர்கள்(சுவீடன் நாட்டவர்கள் அல்லது சுவீடிஷ் வம்சாவளியினர்) 5,6%
ரஷ்யர்கள் 0,5%
எஸ்தோனியர்கள் 0,3
ரோமா இனத்தவர் (ஜிப்சி /நாடோடிகள்) 0,1%
சௌமி இனத்தவர் 0,1%
ஜனாதிபதி:
சௌலி நினிஸ்டோ(Sauli Ninisto) *இது 20.03.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.
பிரதமர்:
ஜூர்கி கட்டிநென்(Jyrki Katainen) *இது 20.03.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.
ரஷ்யாவிடமிருந்து சுயாட்சி:
29.03.1809
ரஷ்யாவிடமிருந்து தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம்:
06.12.1917
சோவியத் ஒன்றியத்திடமிருந்து(ரஷ்யா) முழுமையான சுதந்திரம்:
04.01.1918
பரப்பளவு:
338,424 சதுர கிலோ மீட்டர்கள் (*இலங்கையை விடவும் சுமாராக ஐந்து மடங்கு பெரிய நாடு.தமிழ்நாடு மாநிலத்தை விடவும் சுமாராக இரண்டரை மடங்கு பெரிய நாடு)
சனத்தொகை:
5,400,519 (2011 மதிப்பீடு) *தமிழ்நாடு மாநிலம் மற்றும் இலங்கையை விடவும் பல மடங்கு பெரிய நாடாக இருப்பினும் சனத்தொகை 54 லட்சம் மட்டுமே என்பதைக் கவனத்தில் கொள்க.
நாணயம்:
யூரோ
இணையத் தளக் குறியீடு
.fi இருப்பினும் இந்நாட்டிலுள்ள சுயாட்சிப் பிரதேசமாகிய 'ஓலான்ட் தீவின்' இணையத் தளக் குறியீடு .ax என்பதாகும்.
வேலையில்லாத் திண்டாட்டம்:
7,7%(2011 மதிப்பீடு)
விவசாய உற்பத்திப் பொருட்கள்:
பார்லி, கோதுமை, சீனிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, பால், பால் உணவுகள், மீன்.
தொழிற்சாலை உற்பத்திகள் மற்றும் வருமானம் தரும் தொழில்கள்:
உலோக உற்பத்தி, உருக்குத் தொழில்கள், மின்சார உபகரணங்கள் தயாரிப்பு, விஞ்ஞான(அறிவியல்) இயந்திரங்கள் தயாரிப்பு, கப்பல் கட்டுதல், கடதாசி(காகிதம்) உற்பத்தி, அட்டைப் பெட்டி(Hard board) உற்பத்தி, உணவு வகைகள் தயாரிப்பு, இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு, துணிவகை உற்பத்தி, ஆடைகள் தயாரிப்பு.
ஏற்றுமதிகள்:
மின்சார உபகரணங்கள், மூக்குக் கண்ணாடிகள், இயந்திரங்கள், வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், கடதாசி மற்றும் அட்டைப் பெட்டி, இரசாயனங்கள், அடிப்படை உலோகங்கள், மரம்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

- 12 ஆம் நூற்றாண்டு வரை சுவீடன் நாட்டின் ஒரு மாகாணமாக இருந்தது. அதன் பின்னர் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டு ஏறக்குறைய 8 நூற்றாண்டுகள் ரஷ்யாவின் சுயாட்சிப் பிரதேசமாகத் திகழ்ந்தது.
- சுதந்திரத்திற்குப் பின்னர் துரித வளர்ச்சியடைந்தது.
- வருமானத்திற்காக விவசாயம் மற்றும் காடு சார்ந்த உற்பத்திகளை(மரங்கள், காகித உற்பத்தி) நம்பியிருந்த இந் நாடு இருபதாம் நூற்றாண்டில் அதி நவீன வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப உற்பத்தி நாடாக மாறியுள்ளது.
- உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்களை இணைக்கும் 'நோக்கியா'(NOKIA) கைத்தொலைபேசியின் பிறப்பிடம் மட்டுமன்றி அதன் தலைமை அலுவலகம், தலைமைத் தொழிற்சாலை ஆகியன இந்நாட்டிலேயே அமைந்துள்ளன.
- கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தனி நபர் வருமானம் உயர்வான நாடு.
- நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நோர்டிக் நாடுகளில் ஐரோப்பியப் பொது நாணயமாகிய யூரோவில் இணைந்துள்ள ஒரேயொரு நாடு பின்லாந்து ஆகும்.
- மக்களின் நலன் பேணும் அரசுகளில் முன்னணியில் இருப்பது மட்டுமன்றி, நாட்டு மக்களுக்கு உயர்ந்த தரமான கல்வியை வழங்குதல், ஆண், பெண் சம உரிமை, தனி மனித பாதுகாப்பு ஆகியவற்றில் முன்னணியில் உள்ள நாடு.
- உலகில் ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்வரிசையில் முதலாவது இடத்தில் நியூசிலாந்தும், இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும், நான்காம் இடத்தில் சுவீடனும், ஐந்தாம் இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது(தகவலுக்கு நன்றி:www.infoplease.com)
- உலகில் சுற்றுலாப் பயணிகள் எவ்வித பயமும் இன்றி நிம்மதியாகச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளக் கூடிய நாடுகளின் வரிசையில் 9 ஆவது இடத்தில் பின்லாந்து உள்ளது இவ்வரிசையில் முதலாம் இடத்தில் நியூசிலாந்தும், இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும், மூன்றாவது இடத்தில் நோர்வேயும், நான்காவது இடத்தில் ஐஸ்லாந்தும், ஐந்தாம் இடத்தில் ஒஸ்திரியாவும் உள்ளன.(தகவலுக்கு நன்றி:www.divinecaroline.com)
- உலகில் அமைதியான நாடுகளின் வரிசையில் 7 ஆவது இடத்தில் பின்லாந்து உள்ளது. முதலாவது இடத்தில் ஐஸ்லாந்தும், இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தும், மூன்றாவது இடத்தில் ஜப்பானும், நான்காவது இடத்தில் டென்மார்க்கும், ஐந்தாவது இடத்தில் செக் குடியரசும் உள்ளன(தகவலுக்கு நன்றி:en.wikipedia.org)
- நோர்வே நாட்டை 'மலைகளின் அரசி' எனக் குறிப்பிடுவதுபோல் பின்லாந்து நாட்டை 'ஏரிகளின் அரசி' என்று அழைப்பர். இந்நாட்டில் மட்டும் 60,000 ஏரிகள் உள்ளன.
- இந்நாட்டில் 2006 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி சுமாராக 250 வரையான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆவர்.(தகவலுக்கு நன்றி:tamilnation.co)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக