திங்கள், மார்ச் 05, 2012

எடைக்கேற்ற அளவு தண்ணீர்


50 முதல் 60 கிலோ எடை கொண்டவர்கள் 24 மணி நேர தேவைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். இது வெறும் தண்ணீர் மட்டும் என்றில்லை. காய்கறி, பழங்கள், ஜூஸ், கூட்டு, குழம்பு, சாம்பார் போன்றவைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.


உடலில் இருந்து வெளியாகும் நீரை சமன் செய்வதற்காக தண்ணீர் பருகுகிறோம். ஒருவரது உடலில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. மலம் வழியாக 200 முதல் 300 மி.லி. தண்ணீர் வெளியேறுகிறது. 

சுவாசம் வழியாக 300 முதல் 400 மி.லி. நீர் வெளியேறுகிறது. வியர்வை மூலம் 300 முதல் 400 மி.லி. வெளியேறுகிறது. இதை சரிக்கட்டத்தான் நாம் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் பருக வேண்டியிருக்கிறது. கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால் அதை ஈடுகட்டும் விதத்தில் பருகும் தண்ணீர் பொருட்களின் அளவை அதிகரிக்கவேண்டும்.

* ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அப்போது உட்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவினை அதிகரிக்க வேண்டும்.

* கூடவே உடல் உஷ்ணத்தை தவிர்க்கவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும். கோடை காலத்திலும், காய்ச்சல் ஏற்படும் காலத்திலும் அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும். இப்போது கோடைகாலம் என்பதால் வெயில் அனலாய் கொளுத்துகிறது. மதிய நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.

* இந்த வெயில் காலத்தில் மேலும் 

1 கருத்து:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லதொரு தகவல்...

கருத்துரையிடுக