
நாட்டின் பெயர்:
எக்குவடோர்(Ecuador)
வேறு பெயர்கள்:
 ஈகுவடோர் அல்லது எக்வடோர் அல்லது எக்குவடோர் குடியரசு(Republic of Ecuador) அல்லது ஸ்பானிய மொழியில் ரெபூப்லிகா டெல் எக்வடோர்(Republica del Ecuador)
ஈகுவடோர் அல்லது எக்வடோர் அல்லது எக்குவடோர் குடியரசு(Republic of Ecuador) அல்லது ஸ்பானிய மொழியில் ரெபூப்லிகா டெல் எக்வடோர்(Republica del Ecuador)அமைவிடம்:
தென் அமெரிக்கா / தென் மேற்கு அமெரிக்கா
எல்லைகள்:
வடக்கு- கொலம்பியா
கிழக்கு, தெற்கு - பெரு
மேற்கு - பசுபிக் சமுத்திரம்
அலுவலக மொழி:
ஸ்பானிய மொழி

ஏனைய மொழிகள்:
அமெர் இந்திய மொழிகள் குறிப்பாக குவேகுவா(Quechua)
இனங்கள்:
மெஸ்டிசோ 65%
அமெர் இந்தியர்கள் 25%
ஸ்பானியர்கள் 7%
 கறுப்பர்கள் 3%
கறுப்பர்கள் 3%சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கர் 95%
ஏனையோர் 5%
கல்வியறிவு:
91%
ஆயுட்காலம்:
 ஆண்கள் 72 வருடங்கள்
ஆண்கள் 72 வருடங்கள் பெண்கள் 78 வருடங்கள்
தலைநகரம்:
கீட்டோ (Quito)
ஆட்சிமுறை:
கூட்டாட்சிக் குடியரசு
ஜனாதிபதி:
 ரபேயேல் கோரெயா(Rafael Correa) *இது 27.12.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
ரபேயேல் கோரெயா(Rafael Correa) *இது 27.12.2011 அன்று உள்ள நிலவரமாகும். துணை ஜனாதிபதி:
லெனின் மொரினோ(Lenin Moreno)
ஸ்பெயின் நாட்டிடமிருந்து விடுதலை:
24.05.1822

கிரான் கொலம்பியாவிடமிருந்து விடுதலை:
13.05.1830
பரப்பளவு:
272, 046 சதுர கிலோ மீட்டர்கள்
15,007,343 (2011 மதிப்பீடு)
நாணயம்:
அமெரிக்க டாலர் (USD)
இணையத் தளக் குறியீடு:
.ec
 சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:00 + 593
வேலையில்லாத் திண்டாட்டம்:
14%
வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
33%
இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், மீன், மரம், நீர் மின்சாரம்.
விவசாய உற்பத்திகள்:
 வாழை, காப்பி, கொக்கோ, அரிசி, உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, கால்நடைகள்(ஆடு,மாடு,பன்றி), கோழி இறைச்சி, முட்டை, மீன், இறால்.
வாழை, காப்பி, கொக்கோ, அரிசி, உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, கால்நடைகள்(ஆடு,மாடு,பன்றி), கோழி இறைச்சி, முட்டை, மீன், இறால்.தொழில்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
பெற்றோலியம், உணவு பதனிடல், மரவேலை, இரசாயன உற்பத்திகள்.
ஏற்றுமதிகள்:
பெற்றோலியம், வாழைப் பழம், பூக்கள், இறால், மீன், கொக்கோ, காப்பி, மரம்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
- பூகம்பம், மண் சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப் படும் நாடு.
- பூமியைக் குறுக்கும் நெடுக்குமாக பிரிப்பதற்கு வரையப் பட்டுள்ள கோடுகளில் பூமத்திய ரேகை(equator) எனும் கோடு இந்நாட்டில் ஆரம்பிப்பதால், ஆரம்பத்தில் இந்நாடு 'ஈக்குவேட்டர்' என அழைக்கப் பட்டு பின்னர் அப்பெயர் மருவி 'எக்குவடோர்' என இந்நாட்டின் பெயராக மாறி இருக்கலாம் எனக் கருதப் படுகிறது.
- உலகின் ஆதிக் குடிகளாகிய இன்கா இன மக்கள் இந்நாட்டிலும் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
- தற்காலத்தில் இந்த இன்கா இன மக்கள் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
- அமேசான் ஆற்றின் கரையோரப் பகுதிகளின்(ஆற்றுப் படுகை) உரிமைக்காக பல வருடங்கள் 'பெரு' நாட்டுடன் சண்டையிட்டுத் தோல்வி கண்ட நாடு.
- தற்காலத்திலும் அண்டை நாடுகளாகிய கொலம்பியா, பெரு ஆகிய நாடுகளுடன் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது.
- மலைகள், நீர் வீழ்ச்சிகள், எரிமலைகள் நிறைந்த நாடு.
- 1970 களில் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு.
- வெளிநாட்டுக் கடன் சுமை தாங்க முடியாமல் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் தனது நாணயத்தை இல்லாதொழித்து அமெரிக்க டாலருக்கு மாறியுள்ள நாடு.
- நாடு ஏழை நாடாக இருந்தாலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. இந்நாட்டில் 61 பல்கலைக் கழகங்கள் உள்ளன. நாட்டின் கல்வியறிவு 91% என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
 



 
 
1 கருத்து:
நன்றி பயனுள்ள தகவல்
யார் தடை போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி : சங்கீதா - கிரிஷ் திமிர் பேட்டி(காணொளி )
கருத்துரையிடுக