செவ்வாய், மே 10, 2011

நாடுகாண் பயணம் - பல்கேரியா



நாட்டின் பெயர்:
பல்கேரியா(Bulgaria)

முழுப் பெயர்:
பல்கேரியக் குடியரசு 

அமைவிடம்:
தென்கிழக்கு ஐரோப்பா 

எல்லைகள்:
வடக்கு - ருமேனியா 
தெற்கு - கிரேக்க நாடு மற்றும் துருக்கி 
கிழக்கு - கருங்கடல் 
மேற்கு - மசிடோனியா மற்றும் செர்பியா 

தலைநகரம்:
சோபியா(Sofia)

பரப்பளவு:
110,993,6 சதுர கிலோமீட்டர்கள்.

சனத்தொகை:
7,351,234 (2011 மதிப்பீடு)

இனங்கள்:
பல்கேரியர்கள் 86 %
துருக்கியர்கள் 9 %
ரோமானியர்கள் 4 %
ஏனையோர் 1 %


சமயங்கள்:
இந்தியாவைப் போல் மதச்சார்பற்ற நாடு(Secular State) என தன்னைத்தானே அரசியல் யாப்பின்படி பிரகடனப் படுத்திக் கொண்டுள்ள நாடாக இருப்பினும் பின்வரும் சமயங்கள் பின்வரும் வீதங்களின் அடிப்படையில் காணப் படுகின்றன. இருப்பினும் சகல மதத்தினருக்கும் அவரவர் மதத்தைக் கடைப்பிடிப்பதற்கு பூரண சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது.

பழமைவாதக் கிறீஸ்தவம் 82.6 %
முஸ்லீம் 12.2 %
ஏனைய கிறீஸ்தவர் 1.2 %
ஏனையோர் 4 %

கல்வியறிவு:
98.6 %


ஆயுட்காலம்:
ஆண்கள் 69.9 வருடங்கள்
பெண்கள் 77.4 வருடங்கள்


ஆட்சிமுறை:
பாராளுமன்ற ஜனநாயகம் 

ஜனாதிபதி:
ஜோர்ஜி பர்வானோவ் (Georgi Parvanov)

பிரதமர்:
போய்கோ போறிசோ (Boyko Borisov)

ஓட்டோமான் இராச்சியத்திடமிருந்து(முன்னைநாள் துருக்கி) விடுதலை:
6.04.1909

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு:
01.01.2007

நாணயம்:
லெவ்(Lev / BGN)

இணையத் தளக் குறியீடு:
.bg

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-359


கனிய வளங்கள்(இயற்கை வளங்கள்):
செப்பு, நாகம், ஈயம்.


தொழிற்சாலை உற்பத்திகள்:
இரும்பு, செப்பு, நிலக்கரி, இயந்திர சாதனங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், மின் சாதனப் பொருட்கள், இரசாயனப் பொருட்கள், கட்டிடப் பொருட்கள்.


விவசாய உற்பத்திகள்:
புகையிலை, பழங்கள், விதைகள், மதுபானம், கோதுமை, பார்லி, சூரியகாந்தி, சீனிக்கிழங்கு.


ஏற்றுமதிகள்:
துணிகள், காலணிகள்(சப்பாத்து, செருப்பு) உருக்கு, உலோகம், இயந்திரங்கள், எரிபொருட்கள்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • இந்நாட்டில் ஐ.நா. வினால்(யுனெஸ்கோ) பாதுகாக்கப்படும் 9 கலாச்சார சின்னங்கள் உள்ளன.
  • ஒலிம்பிக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைக் குவிக்கும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று.





2 கருத்துகள்:

Mohan UK சொன்னது…

I Like et

Gowrai Germany சொன்னது…

நல்ல விடயம்

கருத்துரையிடுக