சனி, செப்டம்பர் 08, 2012

யாரை மாற்ற முடியும்?

ஆக்கம்: பிரவீன் சுந்தர், கோயம்புத்தூர், இந்தியா   

பிறர் மீது நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு அதன் மீது நம் வெற்றி மாளிகையை கட்டுவது அறிவுடைமை ஆகாது.
எதிர்பார்ப்பு எதிர்த்தரப்பிலும் இருக்கும் அல்லவா? அவர் இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க உங்களுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறது?

ஆட்டோகாரர் நாம் அழைத்த இடத்துக்கு உடனே, குறைந்த கட்டணத்தில் வரவேண்டும் -

கண்டக்டர் பை நிறைய சில்லறை வைத்திருக்கும் நேர்மையாளனாக இருக்க வேண்டும்-

வங்கிகளில், அரசு அலுவகங்களில் வேலைப்பார்பவர்கள் அக்கம் பக்கம் அரட்டை அடிக்காமல் "கஸ்டமரே கடவுள்" என்று நடக்க வேண்டும். - இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறோம்.

இந்த மாற்றத்தை நிகழ்த்த நாம் உழைக்க வேண்டும். ரொம்ப சரி... அப்படியும் சமூகம் தன்போக்கில் இருந்தால் என்ன செய்வது?

நண்பர்களே!

ஒரு கணத்தில் (அ) நிமிடத்தில் மனிதர்கள் உண்டாக்கபடுவதில்லை. பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சமூக சூழல், அனுபவங்கள் அவரை வித்தியாசமாக உருவாக்கி விடுகின்றன. எனவே ஒரு கணத்தில் எல்லோரையும் மாற்றியமைப்பது சாத்தியம் இல்லை. அது அவசியமும் இல்லை. அது நம்முடைய வேலையும் இல்லை.

மன அமைதியை இழக்காமல் வாழ பழக வேண்டும். தங்களை மாற்றிகொள்கிறவர்கள் சிலர். ஓயாமல் வளருகிறவர்கள் மிக மிக சிலர்.

சூழ்நிலை எத்தனைத்தான் வெளியில் மாறினாலும் உள்ளுக்குள் பலர் மாறுவதே இல்லை.

எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று நாம் துடிக்கிறோம். மாறவில்லையே என்று மன அமைதி இழக்கிறோம்.....பொங்குகிறோம்.... புலம்புகிறோம்....


இந்த உலகத்தில ஒரே ஒருவரைத் தவிர ....வேறு யாரையும் நீங்கள் மாற்றிவிட முடியாது.

அந்த ஒருவர்............ ...நீங்கள் தான்!

2 கருத்துகள்:

krish சொன்னது…

மிக நன்று.

Malar சொன்னது…

Graet,

கருத்துரையிடுக