இன்றைய குறள்
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க; நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான் (206)
பொருள்: துன்பம் தருவன பின்பு தன்னை வந்தடைந்து வருத்துதலை விரும்பாதவன் தான் மற்றவர்க்குத் தீமை தரும் செயல்களைச் செய்தல் கூடாது.
வட கொரியா (North korea)
பியொங்யாங் (Pyongyang)
99% (உலகிலேயே கல்வியறிவு கூடிய நாடுகளில் ஒன்று. அது மாத்திரமன்றி இந்நாட்டில் ஒவ்வொரு மாணவனும்/மாணவியும் 12 ஆவது வகுப்பு வரை கண்டிப்பாகக் கல்வி கற்க வேண்டும்)

வட கொரிய வொன்(North Korean Won / KPW)
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அம்மம்மாவிடம் டீச்சர் சொன்னதைக் கொஞ்சம் செய்தி நிறுவனங்களின் பாணியில் மிகைப்படுத்தி "நாளைக்கி பாப்பாப் பாட்டு பழகுவதற்கு பாவைப் பிள்ளை(பொம்மை) கொண்டு வர வேணுமாம், இல்லாட்டிக்கு பள்ளிக்குடத்துக்கு(பள்ளிக்கூடத்திற்கு என்பதை கிராமத்துப் பேச்சில் இவ்வாறு கூறுவோம்) வர வேணாம் எண்டு டீச்சர் சொன்னவா" என்றேன். இதைக் கேட்ட அம்மம்மாவிடமிருந்து எந்தவொரு பெரிய அதிர்வலைகளையும் காணோம். அவர் வெகு சாதாரணமாக "பூச்சா அல்லது சூட்டியிட்ட ஒரு பாவப்பிள்ளைய வங்கிக் கொண்டு போவன்" என்றார். இதைக் கேட்ட எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவேயில்லை. இங்கு அம்மம்மா 'பூச்சா' 'சூட்டி' எனக் குறிப்பிட்டது எனது ஒன்றுவிட்ட தங்கைகள்(சித்தியின் பிள்ளைகள்). அவர்கள் என்னைவிட மூன்று, நான்கு வயது இளையவர்கள். அவர்களின் தந்தையார்(எனது சித்தப்பா) வியாபார நிமித்தம் அடிக்கடி இந்தியாவுக்கு சென்று வருபவர். அவர் இந்தியாவிலிருந்து வரும்போது தனது பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கி வருவார். இலங்கையோடு ஒப்பிடும்போது மேற்படி விளையாட்டுப் பொருட்கள் இந்தியாவில் மிக மலிவு என்பதைப் பின்னாளில் அறிந்து கொண்டேன். அவர் ஒரு வித்தியாசமான மனிதன். பிள்ளைகளின் வீட்டுப் பெயரை சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என 'பூச்சா'(சிங்களத்தில் பூனை என்று அர்த்தமாம்) எனவும், 'சூட்டி' எனவும் 'சுசி' எனவும் வைத்தார். இதில் 'பூச்சா' மட்டும் வளர்ந்தபின் தனது வீட்டுப் பெயரை வெறுத்து 'விஜி' என மாற்றிக் கொண்டாள். பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் பெற்றோர்கள் அந்தப் பெயர் எதிர்காலத்தில் பிள்ளையால் விரும்பப் படுமா? என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
வகுப்பின் மொனிட்டர் ”பொன்ஸ்” (பொன்னையா) யார் யார் கதைக்கிறார்கள் என்று சர்மாசேரிடம் போட்டுக் குடுக்க லிஸ்ட் எழுதிக் கொண்டிருந்தான்.எங்கட பெயர் தினமும் அவனின் லிஸ்டில் இருப்பதால் நாங்கள் (அமீர் அலி, ராஜேந்திரன், நான்) அவனைக் கண்டுகொள்வதில்லை.