திங்கள், ஆகஸ்ட் 01, 2011

இன்றைய பாடல்

பாடல்:
நிலவு ஒரு பெண்ணாகி..,

பாடலைப் பாடியவர்:
T.M. சௌந்தர்ராஜன்

பாடல் இடம்பெற்ற திரைப்படம்:
உலகம் சுற்றும் வாலிபன் 

இசை:
M.S. விஸ்வநாதன் 

பாடலாசிரியர்:
வாலி 

இன்றைய பாடலை விரும்பித் தேர்வு செய்தோர்:
தி.பரஞ்சோதிநாதன், ஸ்கெயான், டென்மார்க். 


பாடலை விரும்புவதற்கான காரணம்:
கவிஞர் அவர்களின் கவித்துவத் திறமைக்கு ஆயிரக் கணக்கான பாடல்களை உதாரணமாகக் கூறலாம். இருப்பினும் இந்தப் பாடல் 'ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு'. ஒரு பெண்ணை வர்ணிப்பதற்கு கவிஞர் அவர்கள் கையாண்டுள்ள அழகு தமிழ், பாடல் முழுவதும் பரவிக் காணப் படுகிறது.இருப்பினும் "புருவம் ஒரு வில்லாக, பார்வை ஒரு கணையாக, பருவம் ஒரு களமாக, போர் தொடுக்கப் பிறந்தவளோ?" எனும் வரிகளில் கவிஞரின் கவித்துவத் திறமை வெள்ளமாகப் புரண்டு ஓடுகிறது.மற்றும் புரட்சித் தலைவரின் நடிப்பு, M.S.V அவர்களின் இசை.

இதோ வாசகர் தி.பரஞ்சோதிநாதன்  அவர்களுக்காகவும், அந்திமாலையின் வாசகர்களுக்காகவும் அந்தப் பாடல்:



காணொளி உதவிக்கு நன்றி: balalovesou

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

இப்பகுதியில் உங்கள் விருப்பப் பாடல்களும் இடம்பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், பாடல், பாடல் இடம்பெற்ற திரைப்படம், பாடலை நீங்கள் விரும்புவதற்கான காரணம் போன்றவற்றைச் சுருக்கமாக ஆனால் தெளிவாக எழுதி, உங்கள் பெயர், முகவரி போன்ற விபரங்களோடு  anthimaalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். எமக்கு வந்து சேரும் மின்னஞ்சல்களின் வரிசைக் கிரமத்தின் அடிப்படையில் உங்கள் விருப்பங்கள் வெளியிடப்படும்.
-ஆசிரியபீடம்-
அந்திமாலை

8 கருத்துகள்:

Nadanagopal Italy சொன்னது…

Super good song.

Ambika Norway சொன்னது…

மறக்க முடியாத பாடல் .

Mathanagopal Denmark சொன்னது…

Nalla padal.

vinothiny pathmanathan dk சொன்னது…

nice song

மகா மதுரா, டென்மார்க் சொன்னது…

மாமா, உங்கள் பாடல் தேர்வு மிகவும் நல்லா இருக்கிறது.
அன்புடன் மருமகள் மகா

kamai UK சொன்னது…

Good

Ravi.skjern சொன்னது…

Hej T
den valgte sang நிலவு ஒரு பெண்ணாகி..,
er god
fra Ravi

தி.பரஞ்சோதிநாதன், டென்மார்க். சொன்னது…

எனது விருப்பப் பாடலைத் தந்த அந்திமாலைக்கும், எனது விருப்பத் தேர்வைப் பாராட்டிய நேயர்களுக்கும் நன்றிகள்.

கருத்துரையிடுக