ஞாயிறு, மார்ச் 03, 2013

நெஞ்செரிச்சலை எளிமையாக தடுப்பது எப்படி ?

பொதுவாக நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே சென்று நெஞ்சில் எரிச்சலை
உண்டாக்குகின்றன. ஆனால் இத்தகைய நெஞ்செரிச்சலை ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும். முக்கியமாக உணவுகளை சரியாக சாப்பிடுவதோடு, சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடுவது, குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது மற்றும் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்ற வேண்டும். ஒருவேளை ஏற்கனவே நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் உட்காரும் நேரத்தில், அவ்வப்போது ஏதேனும் ஒருசில உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

ஒருவேளை உணவுகளால் சரிசெய்ய முடியாவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக இந்த நெஞ்செரிச்சலுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவை இருக்கின்றன. அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபட முடியும். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் கூட, நெஞ்செரிச்சலை சரிசெய்யும். சரி இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆப்பிள்: ஆப்பிளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம்.

தண்ணீர்: தினமும் போதுமான அளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனால் எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி, தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் சீராக இயங்கும்.

கற்றாழை: நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு ஹிலிகோபாக்டர் பைலோரியா என்னும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும்.

கடல் உணவுகள்: கடல் உணவுகளில் டாரின் (taurine) சத்து அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தை டாரின் குறைக்கும். அதுமட்டுமல்லாமல், இது கண்களுக்கும் சிறந்தது.

ஆப்பிள் சீடர் வினிகர்: இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நெஞ்செரிச்சலை தடுக்கலாம்.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.

பால்: பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், அது எரிச்சலை உண்டாக்கும் அமிலம் அதிகம் சுரப்பதை தடுக்கும்.

அதிமதுரம் (Licorice): இந்த உணவுப் பொருள் எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் சிறந்தது. அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் தங்குவதைத் தடுக்கும்.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு: இந்த இரண்டு பழங்களிலும் அதிகமான அளவில் அசிடிக் ஆசிட் மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை அந்த அமிலங்களின் வீரியத்தை குறைத்து, எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தையும் குறைக்கும்.

காரம் மற்றும் எண்ணெய் இல்லாத உணவுகள்: டயட்டில்(சாப்பாட்டில்) காரம் மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனாலும் எரிச்சலைத் தடுக்கலாம். ஏனெனில் காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருட்கள் கூட எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும்.

நன்றி:  neerkondar.blogspot.com

சனி, மார்ச் 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 66  வினைத் தூய்மை

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (652) 
 
பொருள்: தம் தலைவனுக்கு இம்மையில் புகழும், மறுமையில் அறமும் தராத செயல்களை அமைச்சர்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

உங்கள் பெற்றோரை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள். அவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.

அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும்

அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குள் இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு பல நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன.
எட்டுமணிநேர வேலைக்கே இத்தனை 'மெனக்கெடல்' இருக்கும் நிலையில் அதிகாலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை இணைந்தே இருக்கும் மனைவிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அலுவலக டென்சன்
அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள்.
வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.
அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
வீட்டில் மனைவியைப்  பார்த்ததும் அவளைப் பாசத்தோடு கட்டித் தழுவுங்கள். (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்).
சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீது பாசத்தைக்  கொட்டுவாள்.
சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள்.
விடுமுறை நாளில் நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங்கள் மனைவி.

குழந்தையாக மாற்றுங்கள்
சாப்பிடும்போது ஒன்றாகவே சாப்பிடுங்கள். அப்போது மனைவிக்கு சாப்பாட்டை ஊட்டி விடுவதில் தவறே இல்லை.
அவ்வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறிவிடுவாள்.
அந்தக் குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும்.

வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச்செல்லுங்கள்.
சிரித்துப் பேசுங்கள், மகிழ்ச்சியைப்  பரிமாறிக் கொள்ளுங்கள்.
வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள்.
முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள்.
இந்த பாதுகாப்பை எல்லாப் பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.

காதலும் புரிதலும்
சிலநேரங்களில், அவளே எதிர்பார்க்காத வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.
எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி, அவளது கருத்தைக் கேளுங்கள்.
அவள் அப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள்.
செக்ஸ் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஏனெனில் புரிந்து கொள்ளுதல் இல்லாததால்தான் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன.
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது.
துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும்.
மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.

எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள்.
உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

சொர்க்கமாகும் இல்லம்
எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதானமாகிவிடுங்கள்.
அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். "ஏதோ தவறாகப் பேசிவிட்டேன், இனி கண்டிப்பாக அப்படிப் பேச மாட்டேன்" என்று சமாதானமாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற்படுவதை உங்களால் உணரமுடியும்.
இப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங்கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான்.
நன்றி:tamilcinematv.com

வெள்ளி, மார்ச் 01, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 66  வினைத் தூய்மை


துணைநலம் ஆக்கம் தரூஉம்; வினைநலம் 
வேண்டிய எல்லாம் தரும். (651)

பொருள்: நல்ல துணை ஒருவனுக்கு வாய்க்கப் பெற்றால் அஃது அவனுக்குச் செல்வம் ஒன்றை மட்டுமே தரும். ஆனால் அவன் மேற்கொண்ட செயலின் தூய்மையோ அவன் விரும்புவன எல்லாவற்றையும் தரும்.

இன்றைய பொன்மொழி

சுவாமி சின்மயானந்தர் 

என்னுடையது என்று எதையெல்லாம் எண்ணுகிறீர்களோ அவற்றையெல்லாம் வரிசையாக எழுதிக்கொண்டே போங்கள். ஒன்றைக்கூட விடாதீர்கள். பட்டியல் எவ்வளவு நீளுகிறதோ அவ்வளவு உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள இடைவெளியாகும். என்னுடையது என்னும் பட்டியல் குறையக் குறைய நாம் கடவுளை நெருங்குகிறோம் என்பது பொருளாகும்.

'அல்சர்' - சில உண்மைகள்

வயிற்றிலே ஒன்றும் இல்லை என்ற மாயத் தோற்றமும் பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்ச்சியும் தோன்றுகிறதா? மார்புப்ப பகுதியில் எரிவது போன்ற உணர்வு உள்ளதா? வயிற்றிலேருந்து புளிப்புச் சுவையான நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்குகுடல் புண் இருக்கலாம்.
***

குடல் புண் என்றால் என்ன?

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயத்தை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன.
*
இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.
***

புண் எதனால் ஏற்படுகிறது?

குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
*
சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
*
செரிமான தொகுதியில் எங்கு புண் ஏற்படுள்ளது என்பதைப் பொறுத்து குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .
2)சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

இரண்டு வகைகள் இருப்பினும் இரண்டுக்கும் உரிய நோய்க் குறிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.


குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.

*

இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது.

*
அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். சட்டத்துக்கு உட்பட்டதுபோல் இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

*

சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை.

*
ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.

*

சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

*

சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

*

குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டால்...

குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதிரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.

*

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.

*

ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

*

சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.
*
வயிற்றுத் தடையையும் அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
*
மருத்துவர் குடல்புண் இருப்பதைக் கண்டறிந்தால், சில... மேலும்