ஞாயிறு, டிசம்பர் 25, 2016
சனி, அக்டோபர் 29, 2016
இன்று நள்ளிரவில் நேர மாற்றம். மறக்க வேண்டாம்!

அமெரிக்கக் கண்டத்தில்(கனடா உட்பட) இந்த நேர மாற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற இருப்பதும் ,
அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியா) இந்த நேர மாற்றம் கடந்த 2.10.2016 அன்றும் இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்கது.
ஆசிரிய பீடம்
அந்திமாலை
www.anthimaalai.dk
புதன், செப்டம்பர் 28, 2016
மரண அறிவித்தல்
இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 'வேலன்சீமா' ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட 'ராசா' என்று அழைக்கப்படும் வரப்பிரகாசம் மரியதாஸ் அவர்கள்(ஓய்வு பெற்ற தொலைபேசி இயக்குனர், ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழை) நேற்றைய தினம்
செவ்வாய்க்கிழமை(27.09.2016) ஏழாலையில் காலமானார்.
செவ்வாய்க்கிழமை(27.09.2016) ஏழாலையில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற வரப்பிரகாசம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மலோசனியின் அன்புக் கணவரும், ராஜ மேனகன் (பொது சுகாதார பரிசோதகர், தெல்லிப்பழை), தாட்சாயணி (லண்டன்), வாகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ரோகிணி, தயானந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்க்ஷயா, அனுஜா ஆகியோரின் அன்புப் பேரனும்
காலஞ்சென்ற பத்மினி, ஜுலியஸ்(அல்லைப்பிட்டி), குணபாலசிங்கம் ( மல்லாவி, முல்லைத்தீவு), நித்தியலட்சுமி (வவுனியா) சரோஜினி(அல்லைப்பிட்டி), லிங்ககுரு(பிரேமா, வவுனியா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை(29.09.2016) முற்பகல் 9:00 மணியளவில் ஏழாலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஏழாலை மத்தி 'உசத்தி யோடை' இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்: ராஜேஷ்குமார் ஜுலியஸ் (பெறாமகன்)
தொடர்புகளுக்கு:
ராஜ மேனகன்(மகன்) தொலைபேசி: 0094- 21- 321 0928 / 0094771234623
ராஜேஷ்குமார் (பெறாமகன், பிரான்ஸ்) தொலைபேசி : 00 - 33651369352
செவ்வாய், செப்டம்பர் 20, 2016
6 ஆவது ஆண்டில் உங்கள் அந்திமாலை
இணைய உலகில் கால் பதித்து ஆறு ஆண்டுகளை நிறைவு செய்து ஏழாவது ஆண்டை நோக்கிப்
பயணிக்கும் இந்த நாளில் (20.09.2016) இவ் இனிய தருணத்தில் தமது வருகையின் மூலம் பேராதரவு நல்கிவரும் வாசக உள்ளங்களையும், தன்னலம் கருதாத உழைப்பினை வழங்கிய, வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் போற்றி வணங்குகிறோம்.

உளமார்ந்த அன்புடன்
ஆசிரிய பீடம்
அந்திமாலை
www.anthimaalai.dk
வெள்ளி, ஏப்ரல் 08, 2016
தமிழுக்கு மகுடம்
'தமிழுக்கு மகுடம்' எனும் தலைப்பில் ஒரு மகத்தான விழா ஒன்றினை டென்மார்க்கின் ஓகூஸ்(Aarhus) நகரத்தில் வாழும்
இளைஞர்களாகிய 'ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர்' ஏற்பாடு செய்துள்ளனர். மேற்படி விழா நாளை சனிக்கிழமை(09.04.2016) அன்று ஓகூஸ் நகரத்தில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் டென்மார்க்கில் வாழும் அனைத்துத் தமிழ் உறவுகளும், முக்கியமாக 'ஓகூஸ் நகரத்தில்' வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களும் தவறாது கலந்து கொண்டு தமிழுக்கும், இவ்விழாவுக்கும் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் வண்ணம் அன்போடும், உரிமையோடும் அழைக்கின்றேன். நிகழ்வில் சிந்தனைக்கு விருந்தளிக்கும் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும், கல்விமான்களின் உரையும் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக அடியேன்(இரா.சொ.லிங்கதாசன்) அழைக்கப் பட்டுள்ளேன். அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர்! என ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் சார்பிலும், என் சார்பிலும் உளமார்ந்த அன்போடு வேண்டி நிற்கிறேன்.
உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.
நேரம்: பிற்பகல் 14:00 மணி
விழா மண்டபம்: Vorrevangskolen, Vorregårds Alle 109, 8200 Aarhus N
தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கங்கள்: 31860112, 53575343

ஒன்றுபட்டு உயர்வோம்
மிக்க அன்புடன்
மிக்க அன்புடன்
இரா.சொ.லிங்கதாசன்
ஆசிரியர்
அந்திமாலை இணையம்