வெள்ளி, அக்டோபர் 24, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்புஇன்றித்
தும்மல்போல் தோன்றி விடும். (1253)
 
பொருள்: காமத்தை உள்ளத்திலேயே அடக்கி வைக்க முயல்கிறேன். ஆனால் அது என் முயற்சியை அழித்துத் தும்மலைப் போல வெளிப்படுகின்றது.

இன்றைய சிந்தனைக்கு

கிருஷ்ண பரமாத்மா
 https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul

ஆத்மா நித்தியப் பொருள் எனினும் அதற்குக் குளிர் வெப்பம், இன்ப துன்பம் முதலியன இருப்பது இயல்புதானே என்ற எண்ணம் உனக்கு வரலாம். குந்தியின் மைந்தா! பொறிகள் புலன்களிடத்துப் பொருந்துதலால் குளிர், வெப்பம், இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும் அவைகளின் இயல்பு. அவைகளைப் பொறுத்துக் கொள். ஆன்மாவுக்குத் தோற்றமும் இல்லை, மறைவும் இல்லை. அந்த உண்மையையும் உணர்ந்து கொள்.

வியாழன், அக்டோபர் 23, 2014

செரிமானப் பிரச்சனைக்கு 15 நிமிடங்களில் தீர்வு

செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து:

Anjaraipetti
ஜீரணம் ஆகாமல் அவதி படுவோர்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து பருகலாம். வீட்டில் இருக்கும் சுண்டைக்காய், பெருங்காயம், பூண்டு, ஓமம், சீரகம் என அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களும் உடல் நலத்தை காப்பதற்கு மிகவும் உதவுகிறது. சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, நீர் மோர் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு சுண்டைக்காய் அளவு பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டு கலக்கி, 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகளை நீக்கும்.ஓமம் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம், பூண்டு 50 கிராம், கறிவேப்பிலை 100 கிராம், தோல் நீக்கிய சுக்கு 200 கிராம் இவற்றை லேசாக நல்லெண்ணையில் வறுத்துப் பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர சொரிமானம் ஆகி வயிற்றுக் கோளாறுகள் இன்றி இருக்கலாம்.விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிட்டால் அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம், உடல் வலி, அசதி முதலியவைகளுக்குவீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் மிகவும் நல்லது. 2 பெரிய துண்டு சுக்கு, 2 ஏலக்காய் இவற்றை நசுக்கிக் கொண்டு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, முக்கால் டம்ளராக வற்றியதும் கருப்பட்டி (பனை வெல்லம்) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலநது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வந்தால் அனைவருக்கும் நல்லது. உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்.மேலும் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால், ஜீரணமாகும். சுக்குப் பொடியுடன் சுடுநீரைச் சேர்த்துக் குடிக்கக்வேண்டும். குடித்து முடித்த பின், சுமார் 15 நிமிடங்கள் இடது பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள். ஜீரணம் ஆவதில் சிக்கல் இருக்காது. ஒரு கைப்பிடி துவரம்பருப்பு ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், பெரிய துண்டு பெருங்காயம், 2 கைப்பிடி அரிசி, ருசிக்கு உப்பு, பத்து மிளகாய் வற்றல் இவற்றை சிறு தீயில் எண்ணை விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 3 கைப்பிடி பொட்டுக் கடலை சேர்த்துப் பொடி செய்து பாடடிலில் நிரப்பிக் கொள்ளவும். சூடான சாதத்தில் எண்ணை அல்லது நெய் சேர்த்து சாப்பிட அஜீரணம் போகும். பசி எடுக்காமல் அவதி படுவோர்க்கு பசி எடுக்கும்.
நன்றி:dinaethal.com

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்

காமம் எனஒன்றோ கண்இன்று;என் நெஞ்சத்தை 
யாமத்தும் ஆளும் தொழில். (1252)

பொருள்: காமம் என்னும் தூதனுக்கு இரக்கம் என்பதே இல்லை. அவன் இரவிலும் என் உள்ளத்தைக் காதலரிடம் அனுப்பி இயங்க வைக்கிறான்.

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து
SEO Jesus

உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் போதும் நீங்கள் இம்மலையைப் பார்த்து "இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ" என்று கூறினால் அது பெயர்ந்து போகும்.

புதன், அக்டோபர் 22, 2014

தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்!

இயற்கையின் கொடையான அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.

அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.

நன்றி: kathirrath.blogspot.com

தீபாவளி வாழ்த்துக்கள்