வெள்ளி, அக்டோபர் 11, 2013

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இனிமையான சொற்களை அடுத்தவர்களிடம் கூறுவதற்கு நமக்கு அதிக செலவு ஆகாது. ஆனால் அவற்றின் மதிப்போ மிக மிக அதிகம்.

வியாழன், அக்டோபர் 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்

வகைஅறிந்து தன்செய்து தன்காப்ப மாயும் 
பகைவர்கண் பட்ட செருக்கு. (878)

பொருள்: தான் செய்யும் செயலின் வகையை அறிந்து அது முடிவதற்கு ஏற்றவாறு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்து விடும்.

இன்றைய பொன்மொழி

புத்தர் 

உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை

புதன், அக்டோபர் 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்
 
 
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. (877)


பொருள்: தான் துன்புற்றதைத் தாமாக அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் தன் மெலிவைப் புலப்படுத்தக் கூடாது. 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

இது முடியும், இது முடியாது என்று உணராதவனுக்கும், அதில் எதையுமே முயற்சி செய்து பார்க்காதவனுக்கும் வாழ்வில் ஒன்றுமே கிடைப்பதில்லை.

செவ்வாய், அக்டோபர் 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்


தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன்  விடல். (876)

பொருள்: பகைவனை முன்பே அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும் தனக்கு மற்றொரு செயலினால் தாழ்வு வந்தவிடத்து அவரைக் கூடாமலும் நீக்காமலும் விட்டு வைக்க வேண்டும்.

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்

53.  ஒவ்வொரு மனிதனுக்கும் 'பரம எதிரி' யார்?
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மனமே பரம எதிரியாகும். தங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தாதவர்களுக்கு அது பரம எதிரி போலச் செயல்படுகிறது.