செவ்வாய், ஜனவரி 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை

 
 
படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார் 
மாண்பயன் எய்தல் அரிது. (606)
 
பொருள்: நிலம் முழுதாளும் அரசர்களின் செல்வம் எல்லாம் தாமே வந்து அடைந்தபோதும், சோம்பலுடையவர் அச்செல்வத்தால் சிறந்த நன்மையை அடைதல் இயலாது.

இன்றைய பொன்மொழி

ஐன்ஸ்டீன் 
 ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சி செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

பொங்கல் வாழ்த்து


திங்கள், ஜனவரி 14, 2013

பொங்கல் வாழ்த்துக்கள்


குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 61மடி இன்மை 
 
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன். (605)
பொருள்: சோம்பலும், காலம் நீட்டித்துக் காரியம் செய்யும் குணமும், மறதியும், உறக்கமும் ஆகிய இந்த நான்கு குணங்களும் அழியும் இயல்புடையார் விரும்பி ஏறும் மரக்கலமாகும். 

இன்றைய பொன்மொழி

புத்தர்

உண்மையில் ஆனந்தம் எது தெரியுமா? உங்களால் இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க மாட்டீர்கள்.

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

* கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு,
* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.
* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

நன்றி: வினோ ரூபி, சென்னை மற்றும் 'தமிழர் வரலாறு'