சனி, அக்டோபர் 26, 2013

இன்று நேர மாற்றம், மறக்க வேண்டாம்!

இன்று சனிக்கிழமை (26.10.2013)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு ஐரோப்பியக்  கண்டத்திலுள்ள நாடுகள் அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு) நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்டும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர் அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது.
இங்ஙனம் 
ஆசிரிய பீடம் 
www.anthimaalai.dk

5 கருத்துகள்:

ராஜி சொன்னது…

அறியாத தகவல்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மறக்காமல் பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... நன்றி...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஓ... பனிக்காலம் என்பதாலா...?

வருண் சொன்னது…

Are you sure?!!!

In US, it is November 3rd morning this year (2013)!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இங்கு வாழ்வதால் அனுபவம் உண்டு. தங்கள் படத்துடனான விளக்கம் அருமை.
கூட்டுவதா ,குறைப்பதா எனும் குழப்பம் வரும், இப்போ அந்த தொல்லையே
இல்லை. இங்குள்ள இணையம் வழங்கியுடன் கூடிய பெட்டி மணிகாட்டியுடன் உள்ளதால் அது தானாகவே மாறும்.
அத்துடன் சுவர் மணிகாட்டிகள் கூட தொலையியக்கியூடு
நேரமாற்றமாகும் வகைகள் புழக்கத்துக்கு வந்து விட்டன.
இன்றைய நவீன தொலைக்காட்சிகள் யாவும் தானியங்கியாகவே
மணி மாற்றம் செய்வதால் அச்சிக்கல் குறைந்து விட்டது.
ஆயினும் உங்கள் ஞாபகமூட்டல் , தெளிவாக விளக்கத்துடன் உள்ளது.
நன்றி!
வருண்!
இது ஐரோப்பாவுக்கு ,
கவிதை வீதி- ஆம் பனிகாலத்தில் சூரிய உதயம் தாமதமாகும் அந்த வெளிச்சத்தை பயன் படுத்த இந்த நேரக் குறைப்பு, என்கிறார்கள்.

கருத்துரையிடுக