மன அழுத்தம் இதிலிருந்து விடுபடும் சில எளிய வழிமுறைகள். இதன் தொடர்ச்சியை இன்று பார்ப்போம்.
மனம்விட்டுப் பேசுங்கள்.
மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும்.
எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மட்டும் மனம்விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் அன்பான ,கனிவான வார்த்தைகள் உங்கள் மனதிற்குத்
தெளிவைத் தரும்.
உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.
தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல்.
எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையில் மட்டும் முழு ஈடுபாட்டுடன் செயற்படுங்கள்.
நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.
விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள்.
கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.
மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக்
கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது.
உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல் முழு ஈடுபாட்டுடன் உதவுங்கள்.
உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும்!
அன்புடன் கருத்துத் தெரிவித்து என்னை ஊக்குவிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

அன்புடன் வினோதினி பத்மநாதன்.
9 கருத்துகள்:
Excllent.
``மனம் விட்டு எமது பிரச்சனையை மற்றவர்களிடம்
சொன்னால், எமக்கு மேலும் துன்பத்தை தருவார்கள். யார் நமக்கு நம்பிக்கையானவர்கள்
நமது பெற்றோர்களை தவிர.,,, நன்றி வினோதினி
very good advies
மிகவும் அருமையான தகவல்கள். இதை வசித்து பாராட்டி விட்டு போகாமல், அதனை தனது வாழ்வில் பின்பற்றினால், சந்தோஷம். ஒரு நல்ல விடையத்தை சொன்னாலும், அதை ஒருதடவையாவது முயற்சி செய்யாமல் நெகடிவ்வாக சிந்தித்து பதில் அளிப்பார்கள் பலர். இவ்வாறான மாந்தர்களை கடவுள் கூட மாற்றமுடியாது.
இப்படியான ஆக்கங்களை என்னும் எதிர்பார்க்கிறேன் உங்களிடம் இருந்து.
அந்திமாலைக்கு எனது நன்றிகள், இப்படி ஒரு சிறந்து எழுத்தாளரை அறிமுகம் செய்து, அவரின் அருமையான படைப்புகளை அந்திமாலையில் இணைத்தமைக்கு.
good aakkam vino! vaalthukal!
Well done
All the best to Vinothini
Super.. very good.. keep it up
We have to keep that, thanks for Vino.
கருத்துரையிடுக