வியாழன், ஜூன் 30, 2011

வாழ்வியல் குறள் - 1

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க் 
1. பெற்றோர் உயர்ச்சி
லக உறவின் ஆரம்பச் சுருதி
உன்னதமான அம்மா, அப்பா.
ன்புப் பெற்றோர் அனுபவ மொழி
வென்றிடும் வாழ்விற்கு ஏணி.
தியற்று  மனிதன் அந்நியமாய்  பெற்றோரை
மதித்தால் அவன் அற்பன்.
பெற்றோர் மனமிசை வீற்றிருக்கும் பிள்ளை
குற்றப் பாதையை நாடான்.
வாழ்வுக் கோயிலின் மூல விக்கிரகங்கள்
தாழ்விலா வாழ்வுடைய பெற்றோர்.
ற்று உயர் பதவி வகித்தென்ன
பெற்றோரைப் பேணாதோன் கீழோன்.
யர்வு தாழ்வற்ற பெற்றோர் அன்பு
துயர்வற்ற படகுத் துடுப்பாகும்.
னிவுடை பெற்றோர் பிள்ளைகளிற்கு நல்ல
துணிவு தரும் தோழராகிறார்.
றைவனுக்குச் சமமான பெற்றோர் இல்லத்து
கறையற்ற தூண்டாமணி விளக்குகள்.
ன்றாக வாழ்ந்து தமது பெற்றோர்
நற்பெயர் காத்தல் பிள்ளைகட்கழகு.

14 கருத்துகள்:

Rogni Denmark சொன்னது…

EXCELLENT.

Mohan, Denmark சொன்னது…

Very Good, Vetha

Maran UK சொன்னது…

patorkall potappadda vandajavarkkal. athi nallathka soliullerkall. nanrei.

PALAN SWEDEN சொன்னது…

Super.

RAMYA DK சொன்னது…

Aka atumai atumai. vallathukall. VETHA ante.

Arul, DK சொன்னது…

I like it

vinothiny pathmanathan dk சொன்னது…

excellent vetha. super

kovaikkavi சொன்னது…

உண்மையில் வேதாவின் குறள் என்று தான் தலைப்பிட நினைத்தேன், பின்னும் வேண்டாம் என்று வாழவியல் குறள் என்று ஆக்கினேன். காலையில் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அதோடு ஒரு பொறுப்புணர்ச்சியும் கூடியது. அசட்டையாக, ஆறுதலாக தலைப்பிட்டு எழுதி வந்தேன் இனி கொஞ்சம் வேகமாக எழுத வேண்டும் எனும் உணர்வு வந்தது. இன்றே இன்னொரு தலைப்பிற்கும் முக்கால் பங்கு எழுதிவிட்டேன். எழுதும் கருத்துகள் சரியாக, உலக வாழ்வோடு ஒட்டியதாக அமைய வேண்டுமே! மிக்க நன்றி அந்திமாலை ஆசிரியரே! நேயர்களுக்காக மறுபடி கருத்திடுவேன்.

நல்லூர் சண் சொன்னது…

எல்லோர்க்கும் விளங்கும் வகையில் இலகு தமிழில் கூறியது பாராட்டுக்குரியது

kovaikkavi. சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் சகோதரர் சண். '' இனி இவவுடையது விளங்க எங்கு போவது!'' என்று கூறிக் கூறியே எனது தமிழை இலகு தமிழாக மாற்றியவர் எனது கணவர் தான். முன்பு மிகக் கடினமாகவே எழுதினேன் '' உது யாருக்கு விளங்கும்?'' என்பார் கணவர். எழுதி விட்டு அபிப்பிராயம் கேட்க வாசித்தக் காட்டுவேன். அப்படியாக மிக இலகு தமிழுக்கு மாறினேன். அதில் திருப்தியடைகிறேன். நன்றி உங்கள் கருத்திற்கு.

Ramani DK சொன்னது…

அருமை அருமை அருமை .

RAJAN SKJERN DK சொன்னது…

தாய் தந்தையற்கு நிகர் ஏதும் இல்லை . அதை உணந்து கொண்டால் பிள்ளைகளுக்கு வாழ்வில் உயர்வு தான் .

Vetha. Elangathilakam-DK சொன்னது…

அன்பான கருத்திட்ட அன்புள்ளங்களிற்கும், ஆசையாக வாசித்து மகிழ்ந்த உள்ளங்களிற்க்கும் இரு கரம் பற்றி நன்றி கூறுகிறேன். தனித்தனியே பெயரிட்டு விழிக்காது என் நன்றியை இங்கு வரிகளால் சமர்ப்பிக்கிறேன். என்னால் முடிந்தளவு நல்லது செய்வேன் மீண்டும் அனைவருக்கும் நன்றி.

Anu, USA சொன்னது…

Very good..

கருத்துரையிடுக