ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது மழைத் தண்ணீரைச் சேகரித்து உபயோகித்தல்
சிங்கப்பூரில் மழைநீர்த் தேக்கம் |
திட்டம் நடைமுறையிலுள்ள நாடுகள் :
சிங்கப்பூர், பிரித்தானியா, சீனா, பிரேசில், தாய்லாந்து, இலங்கை, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, இந்தியா.
திட்டத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ள நாடுகள்:
தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகின்ற, வரட்சி நிலவுகின்ற அனைத்து நாடுகளும்.
மேற்படி திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீர் எதற்குப் பயன்படுத்தப் படுகிறது?
குடிநீர்(சில நாடுகளில் மட்டும்), தீயணைப்புப் படையினர் உபயோகிக்கும் தண்ணீருக்காக, தண்ணீர் விளையாட்டுக்கள், நீச்சல் தடாகங்கள், பூங்காக்கள், உல்லாச மையங்களில் உருவாக்கும் செயற்கை நீர்வீழ்ச்சிகள், வீதியோரங்களில் வளர்க்கப்படும் மரங்கள், செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதற்கு, வீதிகளில் அழகுக்காக உருவாக்கப்படும்'சீறியடிக்கும் தண்ணீர்க் குழாய்கள்'(Water Fountains) மலசல கூடங்களில் உபயோகிக்கப்படும் தண்ணீருக்காக மற்றும் அழகுக்காக உருவாக்கப்படும் சிறிய குளங்கள் போன்றவற்றிற்காக இம்மழைத் தண்ணீர் பயன்படுத்தப் படுகிறது.
தண்ணீரைச் சீறியடிக்கும் செயல்முறையால் காற்றில் குளிர்மை ஏற்படுகிறது என்பதுடன் மனிதருக்கு மனதில் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. |
சிங்கப்பூரின் விமானநிலையத் தோற்றம். மழைத் தண்ணீரைச் சேகரிப்பதற்கு வசதியாக கூரைப் பகுதி கண்ணாடியால் அமைக்கப் பட்டுள்ளது. |
எவ்வாறு தண்ணீர் சேகரிக்கப் படுகிறது?
அடுக்கு மாடிக் கட்டிடங்களின்(Flats) வழியே மழைகாலத்தில் ஓடும் தண்ணீரைச் சேகரித்தல்(Gutter), சாதாரண வீட்டுக் கூரை(Roof) வழியே ஓடும் தண்ணீரைச் சேகரித்தல்(Drums), வெட்ட வெளியில் நிலத்தில் சீமேந்துப் பூச்சு வேலை செய்து, தண்ணீர்த் தாங்கிகள் செய்து தண்ணீரைச் சேகரித்தல், செயற்கையாக மனித முயற்சியினால் வெட்டப்பட்ட குளங்கள், வாய்க்கால்களின் மூலம் மழைகாலத்தில் சேரும் தண்ணீரை ஓரிடத்தில்(Reservoirs) சேகரித்து கோடைகாலத்தில் உபயோகித்தல். இதுதவிரவும் இக்கட்டுரையில் கடந்த சில அத்தியாயங்களில் தலைப்பாக 'சிங்கப்பூர் வழிகாட்டுகிறது' என்று நான் எழுதியதற்குக் காரணம் அந்நாடு மேற்படி திட்டங்களை மிகவும் சிறப்பாக பயன்படுத்துவது மட்டுமன்றி மேற்படி 'மழைநீரைச் சேகரிக்கும்' திட்டத்தில் மேலும் ஒரு படி முன்னேறி சிங்கப்பூரின் பிரதான விமான நிலையமாகிய 'சாங்கி விமான நிலையத்தின்'( Changi Airport) சுற்றாடல், மாடிக்கட்டிடங்களில் மட்டுமல்லாமல் 'விமான ஓடுபாதையிலும்' கிடைக்கும் மழைத் தண்ணீரை மிகவும் கவனமாகத் திட்டமிட்டுச் சேகரித்து விமான நிலையத்தின் தண்ணீர்த் தேவையில் 1/3(மூன்றிலொரு பங்கு) பங்கை ஈடு செய்கிறது. இதன்மூலம் அப்பகுதியில் மட்டும் வருடமொன்றுக்கு 390,000 அமெரிக்க டொலர்களைச் சேமிக்க முடிகிறது(மிச்சம் பிடிக்க முடிகிறது.
சிங்கப்பூரின் தேசியச் சின்னம் |
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன)
3 கருத்துகள்:
very nice article and nice photos
oru nalla visiyam allorukkum vasikka kidaithathu
Well done.
கருத்துரையிடுக